Published:Updated:

`சென்னையிலே குடியேற விரும்புகிறேன்!’- பிரிவு உபசார விழாவில் தஹில் ரமானி உருக்கம்

மும்பையில் இருப்பதைவிட சென்னையிலேயே குடியேற விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார்.

tahilramani
tahilramani

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் தஹில் ரமானி. அவரை தலைமை நீதிபதியாக நியமித்து ஒருவருடம் ஆன நிலையில், சென்னைக்கு வேறு தலைமை நீதிபதியை நியமிக்க கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

tahilramani
tahilramani

இந்த இட மாற்றத்தை நீதிபதி தஹில் ரமானி ஏற்க மறுத்து, கொலீஜியத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த நிலையில், தஹில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. வழக்கும் தள்ளுபடிசெய்யப்பட்டது. இந்நிலையில், தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

Vikatan

இதில் கலந்துகொண்டு பேசிய தஹில் ரமானி, ``பாரம்பர்யமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது குறித்து பெருமை கொள்கிறேன். மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குகிறது. சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கே நிலம் வாங்கியுள்ளேன்.

send off party for tahilramani
send off party for tahilramani

கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் 5040 வழக்குகள் முடித்து வைத்ததை நியாயமாகவேதான் கருதுகிறேன். அதற்கு உறுதுணையாக இருந்த நீதிபதி துரைசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நன்றி” என்று உருக்கத்துடன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்திரன், தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.