Published:Updated:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

சென்னை உயர் நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாணவியின் சடலத்தை நாளை பெற்றுக்கொள்வதாக அவர் பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை ஒப்படைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சதீஸ்குமார், ``மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் தாமதம்... ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்படுத்துகிறீர்கள்... அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு ஆய்வுசெய்ய வேண்டும். உடற்கூறாய்வு அறிக்கையோடு, உடற்கூறாய்வு வீடியோ பதிவுகளையும் ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு ஒப்படைக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கைகளைத் தகுந்த தடவியல் நிபுணர்களைக்கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அது பெற்றோருக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது. இறுதிச் சடங்கை கண்ணியமாக நடத்துங்கள். மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும். நடந்தது என்னவென்று தெரியாமல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்யான கருத்துகள் பரவிவருகின்றன. அதை நம்ப வேண்டாம். மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்றைக்குள் முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். மாணவியின் உடலை நாளை 11 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்

வன்முறையில் பாதித்த மாணவர்களைப் பற்றி எவரும் பேசவில்லை. இந்தப் பிரச்னையில் பல மாணவர்களின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும்'' என்றார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாணவியின் சடலத்தை நாளை பெற்றுக்கொள்வதாக அவர் பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!