Published:Updated:

``வளர்ப்புக் குழந்தைகளும் கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலையைப் பெறலாம்!" - கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர் நீதிமன்றம்

`பெற்ற குழந்தைக்கு இருக்கும் அதே உரிமை, தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் உண்டு. எனவே, கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலைக்காகப் பரிசீலிக்கப்படும்போது அவர்கள்மீது பாகுபாடு காட்ட முடியாது.' - கர்நாடக உயர் நீதிமன்றம்

``வளர்ப்புக் குழந்தைகளும் கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலையைப் பெறலாம்!" - கர்நாடக உயர் நீதிமன்றம்

`பெற்ற குழந்தைக்கு இருக்கும் அதே உரிமை, தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் உண்டு. எனவே, கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலைக்காகப் பரிசீலிக்கப்படும்போது அவர்கள்மீது பாகுபாடு காட்ட முடியாது.' - கர்நாடக உயர் நீதிமன்றம்

Published:Updated:
கர்நாடக உயர் நீதிமன்றம்

பொதுவாகவே அரசுப் பணியில் வேலைபார்ப்பவர் திடீரென இறந்துவிட்டால், அந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அந்த வேலை, இறந்தவரின் மகனுக்கோ, மகளுக்கோ வழங்கப்படும். ஆனால் இந்த இடத்தில், ஒருவேளை இறந்தவருக்கு வளர்ப்பு மகனோ, வளர்ப்பு மகளோ இருந்தால் அவர்களுக்கு இந்த வேலை வழங்கப்படுமா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது. இந்த நிலையில்தான் இது தொடர்பான ஒரு வழக்கில், ``வளர்ப்புக் குழந்தைகளும் கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலையைப் பெறலாம்'' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடக உயர் நீதிமன்றம்

முன்னதாக அரசு வக்கீல் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராகப் பணியாற்றிய முட்டாட்டி என்பவர், கடந்த 2011-ல் தன்னுடைய சொந்த மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, கிரீஷ் என்பவரைத் தத்தெடுத்திருக்கிறார். அவருக்கு மனவளர்ச்சி குன்றிய ஒரு மகளும் உண்டு. பின்னர் 2018-ல் முட்டாட்டி இறந்துவிட, கருணை அடிப்படையில் தன்னுடைய வளர்ப்பு தந்தையின் வேலையைத் தனக்கு தருமாறு கிரீஷ் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் 2021-ல் இந்த விண்ணப்பம், 1996-ம் ஆண்டு கர்நாடகா சிவில் சர்வீஸ் (கருணை அடிப்படையில் நியமனம்) விதிகள் மேற்கோள்காட்டப்பட்டு, வளர்ப்பு மகன் என்பதால் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து கிரீஷ் இதை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதிகள் சூரஜ் கோவிந்தராஜ், ஜி.பசவராஜா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

இதை விசாரித்த நீதிமன்றம், ``எங்கள் கருத்தில் தற்போதிருக்கும் விதிகளின் அடிப்படையில், பிரதிவாதி எண்.2 மற்றும் 4 மூலம் வளர்ப்பு மகனுக்கும், இயற்கையான மகனுக்கும் இடையேயுள்ள வேறுபாடு இந்த விஷயத்தில் எந்தத் தாக்கத்தையும் அல்லது பங்கையும் கொண்டிருக்காது. இது அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறும் செயற்கையான வேறுபாட்டை நீக்கும் வகையில் கூறப்பட்ட விதிகள் திருத்தப்பட்டிருக்கின்றன. பெற்ற குழந்தைக்கு இருக்கும் அதே உரிமை, தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் உண்டு. எனவே, கருணை அடிப்படையில் பெற்றோரின் வேலைக்காக பரிசீலிக்கப்படும்போது அவர்கள்மீது பாகுபாடு காட்ட முடியாது. கருணை நியமனம் கோரி வளர்ப்பு மகன் செய்த விண்ணப்பம் நேர்மையானது. எனவே தத்தெடுக்கப்பட்ட மகன், இயற்கை மகன் என்ற வேறுபாட்டைக் காட்டாமல், மனுதாரரை இயற்கையாகப் பிறந்த மகன் என்பதுபோல் கருத வேண்டும்" என்று அவரின் மனுவைப் பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டது.