Published:Updated:

``கொலிஜியம் அமைப்பில் அரசுப் பிரதிநிதிகளைச் சேர்க்க வேண்டும்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

கொலிஜியம் அமைப்பில் அரசுப் பிரதிநிதிகளைச் சேர்க்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

``கொலிஜியம் அமைப்பில் அரசுப் பிரதிநிதிகளைச் சேர்க்க வேண்டும்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம்

கொலிஜியம் அமைப்பில் அரசுப் பிரதிநிதிகளைச் சேர்க்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

Published:Updated:
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றிருக்கிற நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளைத் தேர்வுசெய்வது, இடம் மாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும். கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், சுயேட்சையாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது.

இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்த, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நீதிபதிகளை ஜனாதிபதிதான் நியமிக்க வேண்டும். கொலிஜியம் முறையில் நீதிபதிகளின் நியமனத்தை நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை. தற்போது நடைமுறையிலுள்ள கொலிஜியம் அமைப்பில் எனக்குத் திருப்தி கிடையாது" என்று பேசியிருந்தார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்த நிலையில், கொலிஜியம் அமைப்பில் அரசுப் பிரதிநிதிகளைச் சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், "சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்தில் மத்திய அரசுப் பிரதிநிதிகளும், உயர் நீதிமன்ற கொலிஜியத்தில் மாநில அரசுப் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த கொலிஜியத்தில் அரசுப் பிரதிநிதி அவசியம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.