Published:Updated:

பிர்பூம் வன்முறை: மம்தா கோரிக்கை நிராகரிப்பு; வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட நீதிமன்றம்!

பிர்பூம் வன்முறை... வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்

மேற்கு வங்கம் பிர்பூம் வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

பிர்பூம் வன்முறை: மம்தா கோரிக்கை நிராகரிப்பு; வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட நீதிமன்றம்!

மேற்கு வங்கம் பிர்பூம் வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
பிர்பூம் வன்முறை... வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் கொலைசெய்யப்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை பிர்பூம் பகுதி பாக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில், வீடுகள் எரிந்து இரண்டு குழந்தைகள், ஆறு பெண்கள் என எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு, இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வன்முறையால் முதல்வர் மம்தாவுக்கும், மேற்கு வங்க ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவின. பிரதமர் மோடியும் பிர்பூம் வன்முறையைக் கண்டித்திருந்தார். இதைத் தொடர்ந்து மம்தா, கலவரம் நிகழ்ந்த பாக்டுய் கிராமத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணத் தொகையையும் அறிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த நிலையில், பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணையை, மத்தியக் குழுவிடம் ஒப்படைக்கக் கூடாது என மம்தா கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், பிர்பூமில் எட்டுப் பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஆர்.பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, மேற்கு வங்க அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கும் என்றும், மேலும் இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism