Published:Updated:

கே.பி.பார்க் குடியிருப்பு விவகாரம்: `வழக்கை சமரச தீர்வுக்கு அனுப்ப முடியாது!' - உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

`டெண்டர் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது' என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

கே.பி.பார்க் குடியிருப்பு விவகாரம்: `வழக்கை சமரச தீர்வுக்கு அனுப்ப முடியாது!' - உயர் நீதிமன்றம்

`டெண்டர் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது' என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்ததை அடுத்து, இதுபற்றிய விவாதங்களும் சட்டமன்றத்தில் நடந்தன. அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தை தடைபட்டியலில் சேர்க்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டிருந்தது.

கே.பி.பார்க்
கே.பி.பார்க்

அதையடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீசை எதிர்த்து பி.எஸ்.டி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி, மேம்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதையடுத்து அந்த தடை மீது இடையீட்டு மனு ஒன்றை அளித்து, இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு வழக்கை அனுப்பி வைக்க வேண்டுமென்று மேம்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ``இதுபோன்ற டெண்டர் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பமுடியாது" என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என்று வழக்கு விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism