Published:Updated:

`திடீர்' பிரேக் போட்ட வழக்கு! -ஜாமீனை ரத்துசெய்த நீதிபதிக்கு அதிர்ச்சி கொடுத்த வக்கீல்கள்

பார் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் நீதிபதி சேம்பருக்குச் சென்று ஜாமீன் ரத்தாக்கியது குறித்துக் கேட்டுள்ளார். அந்த நிர்வாகி வெளியே வந்த உடனே வழக்கறிஞர்கள் சிலர் சேம்பர் கதவைப் பூட்டுப்போட முயன்றுள்ளனர்.

கோர்ட்
கோர்ட்

கேரள மாநிலம் பாப்பனங்கோடு அரசு பஸ் டிப்போவைச் சேர்ந்தவர் டிரைவர் ரகுகுமார். இவர் 2015-ம் ஆண்டு பேருந்து ஓட்டும்போது திடீரென பிரேக் போட்டிருக்கிறார். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. திடீரென பிரேக் போட்டு விபத்து ஏற்படுத்தியதாக ரகுகுமார் மீது வழக்குப் பதியப்பட்டது.

ரகுகுமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்ட வஞ்சியூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு குறித்து மாஜிஸ்திரேட் தீபா மோகனன் கடந்த இரண்டு நாள்களுக்குமுன் விசாரணை நடத்தினார்.

கோர்ட்
கோர்ட்

அப்போது, இந்த வழக்கு சம்பந்தமாக பஸ் டிரைவர் ரகுகுமார் தன்னைப் பயமுறுத்தியதாக, சாட்சிகளில் ஒருவரான லதாகுமாரி என்பவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து டிரைவர் ரகுகுமாரின் ஜாமீனை ரத்து செய்து மாஜிஸ்திரேட் தீபா மோகனன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் தரப்பு வழக்கறிஞர், `இது ஜாமீன் வழங்கக் கூடிய வழக்கு தான். அதே நேரம் சமரச முயற்சியும் நடக்கிறது' என்று வாதிட்டார்.

அந்தச் சமயத்தில் சில வழக்கறிஞர்கள் ஆவேசமாகி கோஷம் எழுப்பியதுடன் கோர்ட் வாசலைப் பூட்ட முயன்றுள்ளனர். இதற்கிடையில் மாஜிஸ்திரேட் தனது சேம்பருக்குச் சென்றுள்ளார். அப்போது பார் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் மாஜிஸ்திரேட் சேம்பருக்குச் சென்று ஜாமீன் ரத்தாக்கியது குறித்துக் கேட்டுள்ளார். அந்த நிர்வாகி வெளியே வந்த உடனே வழக்கறிஞர்கள் சிலர் மாஜிஸ்திரேட்டின் சேம்பர் கதவைப் பூட்டி பூட்டுபோட முயன்றுள்ளனர். அப்போது தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சென்று அங்கிருந்தவர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார்.

ட்ரம்ப்பைவிட 17 மடங்கு சொத்து; ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம்- ட்ரம்ப்பை எதிர்க்கும் ப்ளூம்பெர்க் யார்?

இந்தச் சம்பவம் குறித்துப் பெண் மாஜிஸ்திரேட் அளித்த புகாரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹைகோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் வழக்கறிஞர்களும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, நேற்று நடந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.

கோர்ட்
கோர்ட்

இந்த நிலையில் பெண் மாஜிஸ்திரேட் தீபா மோகனனை தடுத்ததாகவும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கோர்ட்டிலுல் சேம்பரிலும் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகவும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பார் அசோசியேஷன் மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 12 வழக்கறிஞர்கள் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.