Published:Updated:

``சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அதிமுக நீக்கியது செல்லும்!" - உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

சசிகலா

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, சசிகலாவை அ.தி.மு.க நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர், 2016-ல் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் 2017-ம் ஆண்டு சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், அ.தி.மு.க பொதுக்குழுவால், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து இந்த விவகாரத்தில், அ.தி.மு.க பொதுக்குழுவின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடுத்திருந்தார். அதை எதிர்த்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

சசிகலாவை அ.தி.மு.க நீக்கியது செல்லும்- சென்னை உரிமையியல் நீதிமன்றம்
சசிகலாவை அ.தி.மு.க நீக்கியது செல்லும்- சென்னை உரிமையியல் நீதிமன்றம்

இந்த நிலையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அந்தக் கட்சியின் தலைமை நீக்கியது செல்லும் என உத்தரவிட்டு, சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு முன்னர்வரை, சசிகலா தரப்பிலிருந்து வெளிவரும் அனைத்து அறிக்கைகளிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தச் சூழலில், தீர்ப்பு அவருக்கு எதிராக வந்திருப்பது அவர் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism