டாக்சிக் மதன் 18+ யூடியூப் சேனல் மூலம் பெண்களைத் தவறாக சித்திரித்துப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் பண மோசடி செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சைபர் க்ரைம் போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு பப்ஜி மதன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் மதன் இந்த வழக்கில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் மதன்மீது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையடுத்து, தன் கணவர்மீதான குண்டர் சட்ட நடவடிக்கைக்கு எதிராக மதன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கைக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், பப்ஜி மதன் பேச்சில் நச்சுத்தன்மை உள்ளது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.