Published:Updated:

`தண்டனைக்குரிய குற்றம்!' - ஆன்லைன் பட்டாசு விற்பனைத் தளங்களை முடக்க உத்தரவு

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது.

பட்டாசு விற்பனை
பட்டாசு விற்பனை

இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணைத்தலைவர் சஞ்சனா சர்மா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக ஷேக் அப்துல்லா என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் விழாக்கால தள்ளுபடி: செய்வதும், செய்யக் கூடாததும்..! #CheckList

அந்த மனுவில், ''ஆன்லைன் பட்டாசு விற்பனைக்குத் தடைவிதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனுப்பிவைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்க எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, சட்டவிரோதமாக ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் தொடங்கிவிட்டதால், ஆன்லைன்மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க, சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

 பட்டாசு
பட்டாசு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆன்லைன்மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார்.

மேலும், ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்றால் தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.