Published:Updated:

``நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு அனுப்ப வேண்டும்!” - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்பான வழக்கில், நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கையை, மனுதாரர் சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, துணைவேந்தராகப் பதவி வகித்தபோது பல்கலைக்கழக பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சூரப்பாமீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சூரப்பாவின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதை எதிர்த்த சூரப்பா, தனது தரப்பு வாதத்தை கேட்காமலும், பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு இது பற்றி அறிவிக்கப்படாமலும் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணை ஆணையத்தை ரத்து செய்யவேண்டுமென்றும், அதன் அறிக்கையைத் தனக்கு அளிக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆனால், விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஆளுநருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று கூறி சூரப்பாவுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கில், நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையை மனுதாரர் சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பார்த்திபன், "விசாரணை ஆணையத்தின் அறிக்கையை மனுதாரருக்கு அனுப்ப முடியாது என்று தமிழக அரசால் கூற முடியாது. முறைகேடுகள் குறித்து அவர் தரப்பு வாதங்களையும் கேட்பது அரசின் கடமை" என உத்தரவில் கூறியுள்ளார். மேலும், விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஆளுநருக்கு முன்னதாக சூரப்பாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களில் அறிக்கை மீதான விளக்கத்தை சூரப்பா அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!