Published:Updated:

`எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்துள்ளார்கள்?' - நீட் விவகாரத்தில் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

தமிழகத்தில் ஆள்மாறாட்டம் செய்து எத்தனை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras hc
madras hc

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 மேனேஜ்மென்ட் கோட்டா இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

medical
medical
pixabay

அப்போது, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்தியா மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்ணுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சமீபகாலமாக மருத்துவப் படிப்பில் சேர பல முறைகேடுகள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மாணவர் உதித் சூர்யா மோசடி செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டினர்.

ஜாதிக்காய், வசம்பு, அமுக்கரா சூரணம்...  தூக்கமின்மைக்கு விடைகொடுக்கும் சித்த மருத்துவம்!

மேலும், `ஆள்மாறாட்டம் மூலமாக எத்தனை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்?. நீட் தேர்வு எழுதும் போது மாணவர்கள் காண்பிக்கும் அடையாள அட்டையும் அதே மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது காண்பிக்கும் அடையாள அட்டையும் ஆய்வு செய்யப்படுகிறதா? தேனி மாணவன் உதித் சூர்யா வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது.

surya
surya

உதித் சூர்யா மோசடி செய்தது தெரிந்த பிறகும் கல்லூரி முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா? நீட் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் அதிகாரிகள் பின்பற்றுகிறார்களா? இரட்டை வசிப்பிடச் சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார்களா?' என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர். இது தொடர்பாக தமிழக அரசு நாளை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.