Published:Updated:

"நீர்நிலை ஆக்கிரமிப்பு உத்தரவு; 10 நாள்களில் அமல்படுத்த வேண்டும்!"- அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.

"நீர்நிலை ஆக்கிரமிப்பு உத்தரவு; 10 நாள்களில் அமல்படுத்த வேண்டும்!"- அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.

Published:Updated:
நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அரசு அகற்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அது தொடர்பான வழக்கை விசாரித்தது. கடந்த ஜனவரி மாதம் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது, ``ஆக்கிரமிப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்றப்பட வேண்டும்" என்றும், ``அது தொடர்பான அறிக்கையை மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வுக்கு முன்பாக இன்று நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கையைத் தாக்கல்செய்யக் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டிருந்ததது. அப்போது நீதிபதிகள், நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மேலும், ``நீதிமன்ற உத்தரவை அடுத்த 10 நாள்களில் அமல்படுத்தவில்லையென்றால் தலைமைச் செயலாளரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடுவதுடன், கடைசி உத்தரவை அமல்படுத்தும்வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்க நேரிடும். நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்த நீதிபதிகள்... வழக்கு விசாரணையை 10 நாள்களுக்குத் தள்ளிவைத்தனர்.