Published:Updated:

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜுக்கு சாகும் வரை சிறை... நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரங்கள்!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ்

மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜுக்கு சாகும் வரை சிறை... நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரங்கள்!

மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

Published:Updated:
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ்

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய ஒரு சம்பவமென்றால் அது சேலம் பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலைதான். கோகுல்ராஜ், தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவியுடன் பழகிவந்துள்ளார். திடீரென 2015-ம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே, தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் பிணமாகக் கிடந்துள்ளார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யால் விசாரிக்கப்பட்டுவந்தது.

யுவராஜ்
யுவராஜ்

இந்த வழக்கில், கொலைசெய்யப்பட்ட கோகுல்ராஜ் தரப்பில் வாதாட சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரைத் தமிழக அரசு நியமித்திருந்தது. மேலும், இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, ஜோதிமணி இறந்துவிட்டார். பல வருடங்களாக நீதிமன்றங்களில் வாதாடப்பட்டுவந்த இந்த வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்துள்ளன. இதையடுத்து, யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யுவராஜ்
யுவராஜ்

இந்த நிலையில், மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம், இன்று காலை 11 மணியளவில் யுவராஜ் உட்பட 10 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவிருப்பதாக இருந்தது. இதையடுத்து இன்று காலை யுவராஜ் உட்பட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்ற வளாகத்துக்கு வந்த யுவராஜ், "கோகுல்ராஜ் கொலைசெய்யப்படவில்லை. தற்கொலை செய்துகொண்டார். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. என் தரப்பு நியாயம் வீடியோவில் வராததால் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்புக்கு நான் அடிபணியுறேன். ஆனால் தீர்ப்பை முற்றிலுமாக நான் மறுதலிக்கிறேன். மேல்முறையீடு செய்து நியாயம் பெறுவேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரத்துக்குப் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் இரு தரப்பினரின் இறுதி வாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து தண்டனை குறித்த தீர்ப்பு பிற்பகல் 2 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

பின்னர் மதியம் மணிக்கு 3 மணிக்கு மேல் நீதிமன்ற அமர்வு கூடியது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் யுவராஜுக்கு சாகும் வரை (3) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த சனிக்கிழமை அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, A4 சங்கர், A5 : அருள் செந்தில், A6 செல்வக்குமார், A7 தங்கதுரை (யுவராஜ் சகோதரர்), A15 சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து யுவராஜ் உட்பட 10 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெளியானது.

அதன்படி,

A1 : யுவராஜ்- சாகும் வரை (3) ஆயுள் தண்டனை, 5 ஆயிரம் அபராதம்.

A2 : அருண் (யுவராஜின் கார் ஓட்டுநர்)- சாகும்வரை (3) ஆயுள் தண்டனை.

A3 : குமார் (எ) சிவக்குமார்- 2 ஆயுள் தண்டனை.

A8 : சதீஸ்குமார்- 2 ஆயுள் தண்டனை.

A9 : ரகு (எ) ஸ்ரீதர்- 2 ஆயுள் தண்டனை.

A10 : ரஞ்சித்- 2 ஆயுள் தண்டனை.

A11 : செல்வராஜ்- 2 ஆயுள் தண்டனை.

A12 : சந்திர சேகர்- ஆயுள் தண்டனை.

A13 : பிரபு- 1 ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல், 5 ஆயிரம் அபராதம்.

A14 : கிரிதர்-1 ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல், 5 ஆயிரம் அபராதம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism