Published:Updated:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; சவுக்கு சங்கருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை!

சவுக்கு சங்கர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; சவுக்கு சங்கருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

Published:Updated:
சவுக்கு சங்கர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

 மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

பல்வேறு பிரச்னைகள் குறித்து சமூக ஊடகங்களில் அதிரடியாக கருத்துகளைப் பதிவுசெய்து வருபவர் சவுக்கு சங்கர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஜூலை 22-ம் தேதி, `ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது!' என்று ஒரு யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கின் ஆரம்ப விசாரணையில், ``யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து நீதித்துறைமீது அவதூறு பரப்பும் செயலையும், தனிநபர் தாக்குதல்களையும் செய்கிறார். கடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவதூறுகளை ஏற்கமுடியாது. எனவே சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஏற்கெனவே சவுக்கு சங்கர் ஆஜரான நிலையில், இன்றும் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தபோது, "இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரித்த இயலாது. நீதித்துறையில் இடஒதுக்கீடு என்பது முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே கருத்தை பதிவு செய்திருக்கிறேன். என்னுடைய கருத்துகளை தனியே பார்க்கும்போது பிரச்னையை ஏற்படுத்துவதாக தோன்றலாம். ஆனால், அதன் பின்புலத்தை பார்த்தால் உண்மை விளங்கும்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ என் நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு" எனத் தெரிவித்தார் சவுக்கு சங்கர்.

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்க சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.