Published:Updated:

சமுதாயரீதியாகக் கணக்கெடுப்பு நடத்தி தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டும்!-மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியைப் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ''சமுதாயரீதியாகக் கணக்கெடுப்பு நடத்தி தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டும்'' என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கடந்த வாரம் எந்தெந்தத் தொகுதியில், யார் யார் போட்டியிடலாம் என்ற இட ஒதுக்கீடு பட்டியலைத் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி மானாமதுரை நகராட்சி மேயர் பதவிக்கான தொகுதி இந்த முறை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியைப் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்த நிலையில், ``சமுதாயரீதியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டும்'' என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், ``2022 தொடங்கிவிட்ட சூழலில் தொழில்நுட்பம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துவிட்டது. மக்கள் அனைவரிடமும் ஆதார் கார்டும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பைச் சமுதாயரீதியாக எடுத்து அதன்படி தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism