Published:Updated:

சாத்தான்குளம்: `விடிய விடிய அடி; லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் வழக்கில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

சாத்தான்குளம் காவல்நிலைய விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை-மகன் மரணமடைந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

சாத்தான்குளத்தில் இந்த வழக்கு விசாரணையை கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வரும் நிலையில், அவருக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் ஒத்துழைக்க மறுத்ததாகவும், 'உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று காவலர் மகாராஜன் இழிவுபடுத்திப் பேசியதாகவும், மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் நேற்று புகார் செய்தார். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டு பின்பு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்கள்:

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்
 • உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுகளைப் பின்பற்றி, அதை நிறைவேற்றும் பொருட்டு 28-06-2020 அன்று நீதிமன்ற ஊழியர்களுடன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சுமார் 12.45 மணியளவில் சென்றேன். அங்கு காவல்நிலைய பொறுப்பில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், பிரதாபன் ஆகிய இருவரும் ஆய்வாளர் அறையில் இருக்கின்ற நிலையில் உள்ளே நுழைந்தேன். அவர்களிடமிருந்து வரவேற்புக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒருமுறைகூட முறையான வணக்கம் (salute) வைக்காமல், அலட்சிய மனபான்மையுடனும் பொறுப்பற்ற தன்மையுடனும் நின்று கொண்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாத்தான்குளம்; சொந்தஊர் வழக்கில் 6வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர்!
 • பொது நாட்குறிப்பு மற்றும் இதரப் பதிவேடுகளைக் கேட்ட போதும் அவற்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்காத குமார், நிலைய காவலர்களை மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

 • காவல்நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கு போதுமான ஸ்டோரேஜ் வசதி இருந்தும் தினமும் தானாகவே அழிந்து போகும் அளவுக்கு செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்தது. சம்பவம் நடைபெற்ற 19-06-2020 நாளுக்குப் பிறகு எந்தவிதமான காணொலிப் பதிவுகளும் கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்டிருந்தன. முக்கிய நேரடி சாட்சியான அதன் தரவுகள் பதிவிறக்கம் செய்யும் பொருட்டு, அது என்னால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

அறிக்கை
அறிக்கை
 • சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, முறையாக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, காவலர் மகாராஜா என்பவர் அழைக்கப்பட்டு அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பல கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கேட்கப்பட்ட போதும், அவர் பயத்துடன் சரிவர பதில் அளிக்க முன்வரவில்லை.

 • பின்னர் பெண் தலைமைக் காவலரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அவர் சம்பவ இடத்தில் சாட்சியாக இருந்த காரணத்தால், நடந்த நிகழ்வுகள் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. அவர் பயந்து காணப்பட்டார். தான் உண்மைகள் அனைத்தையும் சாட்சியாகச் சொல்வதை வெளியில் சொல்லவேண்டாம் என்றும் வெளியில் இருப்பவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள் என்றும் பயந்தார். அவருக்குப் போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

சாத்தான்குளம்: `தடயங்கள் அழிக்கப்படலாம்!’ -விசாரணையைத் தொடங்க சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவு
 • கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அதனை அவர்கள் அழிக்க நேரிடும் எனவும் சாட்சியம் கூறினார். சாட்சியம் கூறிய லத்திகளைக் கைப்பற்றும் பொருட்டு லத்திகளைக் கொண்டு வர உத்தரவிடப்பட்டது. ஆனால் அங்கிருந்த காவலர்கள் காதில் எதுவும் விழாதபடி நின்று கொண்டிருந்தனர். பிறகு கட்டாயப்படுத்திய பிறகு லத்தியை வழங்கினார்கள்.

 • அப்போது மகாராஜன் என்பவர் என்னைப் பார்த்து, `உன்னால் ஒன்னும் _____ முடியாதுடா’ என்றும் முதுகுக்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி அங்கு அசாதாரணமான சூழலை உருவாக்கினார். மேலும் முதலில் தனது லத்தி சொந்த ஊரில் இருப்பதாக தெரிவித்த அவர் பின்னர் போலீஸ் குடியிருப்பில் இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஒருமையிலே பேசிய அவர் பின்னர் லத்தியே தன்னிடம் இல்லை என்றார். மற்றொரு காவலரிடம் லத்தியைக் கேட்ட போது அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இவை அனைத்தையும் அங்கிருந்த காவலர்கள் வீடியோவாக எடுத்தனர்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்
 • இங்கு சூழல் சரி இல்லை என்று அங்கிருந்து கிளம்ப நேரிடும் போது, சாட்சியம் அளித்த பெண் காவலர் வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். அவரின் பாதுகாப்புக்கு உறுதி அளித்த பின்னர் வெகுநேரத்துக்குப் பின்னர் கையெழுத்து பெறப்பட்டது.

  இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  சாத்தான்குளம் காவல் நிலையம் தற்போது வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தற்போது மீண்டும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு