Published:Updated:

``நாட்டைக் கட்டமைப்பதில் புலம்பெயர் தொழிலாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்"- உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

``நம் நாட்டைக் கட்டமைப்பதில், புலம்பெயர்ந்தவர்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் உரிமைகளைப் புறக்கணிக்க முடியாது." - உச்ச நீதிமன்றம்

``நாட்டைக் கட்டமைப்பதில் புலம்பெயர் தொழிலாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்"- உச்ச நீதிமன்றம்

``நம் நாட்டைக் கட்டமைப்பதில், புலம்பெயர்ந்தவர்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் உரிமைகளைப் புறக்கணிக்க முடியாது." - உச்ச நீதிமன்றம்

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின்போது, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால், இந்திய மக்கள் பலரும் உணவு முதலிய அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் மிகவும் சிரமப்பட்டனர். அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதில் சமூக ஆர்வலர்கள் சிலர், ஊரடங்கின்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, பணப் பரிமாற்றம் மற்றும் பிற தேவையான உதவிகளை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
AP / Channi Anand

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ``நம் நாட்டைப் பொறுத்தவரையில், இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். முதலில் விவசாயி, இரண்டாவது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். நம் நாட்டைக் கட்டமைப்பதில், புலம்பெயர்ந்தவர்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் உரிமைகளைப் புறக்கணிக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், அரசின் திட்டங்களின் பலன்களை எப்படிப் பெறுவது என்று தெரியாமலும் இருக்கலாம். எனவே, இந்தத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும். மேலும், மாநில அரசுகள் இந்திய ஒன்றியத்துக்கு ஒத்துழைத்து உதவ வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்கள், ரேஷன் கார்டு இல்லாமல் உணவு தானியங்களைப் பெறுவதற்கு ஒரு வழிமுறையையும் மத்திய அரசு உருவாக்க வேண்டும்" என்று கூறியது.