Published:Updated:

`கருவில் இருக்கும்போதே விட்டுச்சென்றார்’ -குழந்தையின் பாஸ்போர்ட்டில் தந்தை பெயரை போராடி நீக்கிய தாய்

பாஸ்போர்ட்

`இவ்வழக்கை, குழந்தையை தந்தை முற்றிலும் கைவிட்ட வழக்காகக் கருதலாம். விசித்திரமான சூழ்நிலையில் பாஸ்போர்ட்டில் இருந்து குழந்தையின் தந்தை பெயரை நீக்கிவிட்டு தந்தை பெயர் இல்லாமல் புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டும்.’

Published:Updated:

`கருவில் இருக்கும்போதே விட்டுச்சென்றார்’ -குழந்தையின் பாஸ்போர்ட்டில் தந்தை பெயரை போராடி நீக்கிய தாய்

`இவ்வழக்கை, குழந்தையை தந்தை முற்றிலும் கைவிட்ட வழக்காகக் கருதலாம். விசித்திரமான சூழ்நிலையில் பாஸ்போர்ட்டில் இருந்து குழந்தையின் தந்தை பெயரை நீக்கிவிட்டு தந்தை பெயர் இல்லாமல் புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டும்.’

பாஸ்போர்ட்

பிள்ளையின் பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர் இடம் பெறுவது கட்டாயம். கணவன், மனைவி பிரிந்திருந்தாலும் குழந்தையின் பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் பெண்கள், தங்கள் பிள்ளையின் பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் இடம் பெற விரும்புவதில்லை. அது போன்ற ஒரு வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தான் கர்ப்பமாக இருந்தபோது கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், `என் கணவர் என் மகன் கருவில் இருந்தபோதே விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு என் குழந்தையை தனியாகக் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளேன். எனவே என் மகனின் பாஸ்போர்ட்டில் இருந்து அவன் தந்தையின் பெயரை நீக்கி, தந்தையின் பெயர் இல்லாமல் புதிய பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதி பிரதிபா முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, `இவ்வழக்கை, குழந்தையை தந்தை முற்றிலும் கைவிட்ட வழக்ககாகக் கருதலாம். விசித்திரமான மற்றும் தனித்துவமான சூழ்நிலையில் பாஸ்போர்ட்டில் இருந்து குழந்தையின் தந்தை பெயரை நீக்கிவிட்டு தந்தை பெயர் இல்லாமல் புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் தந்தையின் பெயரை நீக்கலாம். அல்லது குடும்பப் பெயரை மாற்றலாம். ஒவ்வொரு வழக்கிலும் அதன் உண்மைத்தன்மையைப் பொறுத்து இது போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவேண்டும். கடினமான மற்றும் வேகமான விதிகளை பின்பற்றக்கூடாது’’ என்று தெரிவித்தார்.

`பெற்றோருக்கு இடையே பிரிவு ஏற்படும் போது குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இவ்வழக்கில் மனுதாரரின் குழந்தையின் பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயரை நீக்கிவிட்டு புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி உத்தரவிடப்படுகிறது’ என்று நீதிபதி தெரிவித்தார்.