Published:Updated:

``ஜனநாயகக் கட்டமைப்பில் கொலிஜியம் உட்பட அனைத்து அமைப்புகளிலும் குறை இருக்கிறது!" - தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ( ட்விட்டர் )

``நல்ல தீர்ப்பு என்பது ஒரு குற்றவாளி ஏன் குற்றவாளியாக மாறுகிறான் என்பதைப் புரிந்துகொள்வது. ’’ - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

``ஜனநாயகக் கட்டமைப்பில் கொலிஜியம் உட்பட அனைத்து அமைப்புகளிலும் குறை இருக்கிறது!" - தலைமை நீதிபதி

``நல்ல தீர்ப்பு என்பது ஒரு குற்றவாளி ஏன் குற்றவாளியாக மாறுகிறான் என்பதைப் புரிந்துகொள்வது. ’’ - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

Published:Updated:
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ( ட்விட்டர் )

டெல்லியில் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்.சி.பி.ஏ) ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நான் உட்பட கொலிஜியத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து நீதிபதிகளும் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட விசுவாசமான வீரா்களைப்போலச் செயலாற்றிவருகிறோம். ஜனநாயகக் கட்டமைப்பில், கொலிஜியம் உட்பட அனைத்து அமைப்புகளிலும் குறை இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நீதித்துறையில் நல்லவர்களை நுழையவைப்பது, நல்ல வழக்கறிஞர்களை நீதித்துறையில் நுழையவைப்பது என்பது மட்டும் கொலிஜியத்தைச் சீர்திருத்துவதற்கான செயல்பாடல்ல. அதிக ஊதியம் கொடுத்து சிறந்த நீதிபதிகளைக்கொண்டு வருவதால் கொலிஜியத்தைச் சீரமைத்துவிட முடியாது. நீதிபதிகளுக்கு எவ்வளவு அதிகமாகச் சம்பளம் அளித்தாலும், அதை மூத்த வழக்கறிஞர்கள் ஒரே நாளில் சம்பளமாகப் பெற்றுவிடுவாா்கள். எனவே, வழக்கறிஞர்கள் மனசாட்சியின் அழைப்பை ஏற்றுத்தான் நீதிபதியாக வருகிறார்கள். எனவே, நல்லவர்களை நீதிபதிகளாகப் பெறுவது, நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
ட்விட்டர்

ஒவ்வொரு நீதிபதியின் ஆற்றலிலும் உள்ள திறனைப் பற்றி இளம் வழக்கறிஞர்களின் மனதில் பதியவைப்பதன் மூலம் நல்ல நீதிபதிகளை உருவாக்க முடியும். மேலும், நல்ல தீர்ப்பு என்பது இரக்க உணர்வுடன், மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதே. நல்ல தீர்ப்பு என்பது ஒரு குற்றவாளி ஏன் குற்றவாளியாக மாறுகிறான் என்பதைப் புரிந்துகொள்வது. அதற்கு நல்ல நீதிபதிகளை நாம் பெற, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களுக்குள் நீதிபதிகளாகும் திறனை உருவாக்குவதன் மூலம் பெறலாம்" எனத் தெரிவித்தார்.