Published:Updated:

தேசதுரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்யலாம்! - உச்ச நீதிமன்றம் அனுமதி

உச்ச நீதிமன்றம்

தேசதுரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தேசதுரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்யலாம்! - உச்ச நீதிமன்றம் அனுமதி

தேசதுரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

தேசதுரோக வழக்கில் உள்ள சில சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி சில பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களை தண்டிப்பதற்காக, சில சட்டப்பிரிவுகளை அவர்கள் கொண்டு வந்தனர். அண்மை காலமாக அவற்றை நீக்குவதற்கான முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தேசதுரோக குற்றத்தை பெரும் குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவை மறுபரிசீலனை செய்துள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய அரசு எச்சரிக்கை

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், ``தேசதுரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். மறுபரிசீலனை செய்யும் வரை தேசத்துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விவரங்களை வழங்க வேண்டும். தேசதுரோக சட்டத்தை பரிசீலனை செய்யும் பணியை 3 முதல் 4 மாதங்களில் முடித்து வைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம்'' என்றனர்.

தேசதுரோக சட்டத்தில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது. நாளை இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism