Published:Updated:

60 ஆண்டுகால ஆர்.எஸ்.எஸ் இலக்கு... `பொது சிவில் சட்டம்' அடுத்த மாதம் நிறைவேறினால்..?

ஒரே நாடு... ஒரே சட்டம்
ஒரே நாடு... ஒரே சட்டம்

கடந்த ஐந்து ஆண்டுகள் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக ஆட்சியில் இருந்தபோதே, இந்தச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப் பட்டன. கட்சியின் சில மூத்த தலைவர்கள், 'அவசரப்பட வேண்டாம்' என்று சொன்னதால், கிடப்பில் போடப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறுபது ஆண்டுகாலத் திட்டம், அடுத்த மாதம் நிறைவேறிவிடும் என்றே தெரிகிறது. முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என அடுத்தடுத்த சர்ச்சை மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசு, அடுத்து பொது சிவில் சட்டத்தையும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றும் வேலையில் தீவிரமாகியிருக்கிறது. நவம்பர் மாத மத்தியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதுமே, பொது சிவில் சட்ட மசோதாவை ராஜ்ய சபா மற்றும் லோக் சபா இரண்டிலும் நிறைவேற்ற முடிவுசெய்துள்ளது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

கடந்த ஐந்து ஆண்டுகள் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக ஆட்சியில் இருந்தபோதே, இந்தச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப் பட்டன. கட்சியின் சில மூத்த தலைவர்கள், 'அவசரப்பட வேண்டாம்' என்று சொன்னதால், கிடப்பில் போடப்பட்டன. 2019-ல் மீண்டும் அசுரபலத்துடன் ஆட்சியைப் பிடித்ததும் தங்களது அறுபது ஆண்டுகாலத் திட்டமான இந்தச் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. எனவே, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே முத்தலாக் சட்டத்தையும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தையும் நிறைவேற்றிவிட்டனர். அடுத்து, பொது சிவில் சட்டம் காத்திருக்கிறது.

சமூகச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், "முஸ்லிம் சமூகத்தின் தலாக் மற்றும் ஜீவானம்சத்தில் குளறுபடி இருப்பதாகச் சொல்லப் பட்டாலும், இன்று நீதிமன்றங்கள் இதற்கு சரியான பதிலடிகளைக் கொடுத்து வருகின்றன. எனவே, பொது சிவில் சட்டம் எதற்குத் தேவை என்பதைவிட, யாருக்காக இப்போது கொண்டு வரப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்'' என்றார். சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, ''எல்லா மதங்களும் ஒன்றல்ல... ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு வழிபாட்டுமுறையும் சட்ட விதிமுறைகளும் உள்ளன. இவற்றை ஒன்றாக்குவது தேன்கூட்டில் கை வைப்பது போன்றது. இது நாட்டுக்கே பேராபத்தாக அமையும்'' என்றார். பா.ஜ.க மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனோ, ''மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டம் இருக்க முடியும்? 'இந்துக்களின் சட்டமே பொது சிவில் சட்டமாக்கப்படுகிறது' என்று சொல்கிறார்கள். அது தவறு. அனைத்து மதச் சட்டங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை உள்ளடக்கியே இந்தச் சட்டம் உருவாக்கப்படுகிறது'' என்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம்
ஒரே நாடு ஒரே சட்டம்

> பொது சிவில் சட்டம் என்றால் என்ன? இதன் பின்னணியும் விளைவுகளும் என்னென்ன? - விரிவாக அலசும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > ஒரே நாடு... ஒரே சட்டம்! - வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க http://bit.ly/33JZ486

மிஸ்டர் அஜித் தோவல், யார் பயங்கரவாதிகள்?

'சாதாரண குற்றவியல் வழக்குகளைப்போலவே பயங்கரவாத வழக்குகளையும் நீதிமன்றம் அணுகுகிறது. ஊடகங்கள் வாயை மூடிக்கொண்டால் பயங்கரவாதம் குறைந்துவிடும்' என்றெல்லாம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முத்து உதிர்த்திருக்கிறார். இந்தக் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

Terrorism
Terrorism

முதலில், பயங்கரவாதம் என்றால் என்ன, யார் பயங்கரவாதி எனத் தெரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டிஷ் காலனிய அரசு, தேச விடுதலை கோரியவர்கள் எல்லோருக்கும் 'பயங்கரவாதிகள்' எனப் பட்டம் சூட்டியது. பாலகங்காதர திலகர், 'சுதந்திரமே எங்கள் மூச்சு' எனப் பிரகடனப்படுத்தியபோது அவரை பயங்கரவாதி என முத்திரை குத்தி, நாடுகடத்தினர். 'வெள்ளையனே வெளியேறு' என்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய மகாத்மா காந்தியை இன்று உலகமே கொண்டாடுகிறது. ஆனால், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி அவருக்கு 'கலகக்காரர்' எனப் பட்டம் சூட்டியதுடன், பலமுறை காராகிருகத்தில் அடைத்து மகிழ்ந்தது. காலனிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய பகத்சிங்கும் சுபாஷ்சந்திர போஸும் பயங்கரவாதிகளே!

- யார் பயங்கரவாதிகள்? கறுப்புச் சட்டங்கள் சாதித்தது என்ன? நோய்நாடி நோய்முதல் நாடி... > சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் அஜித் தோவல், யார் பயங்கரவாதிகள்? http://bit.ly/2OXBqkx

அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே!

சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z

அடுத்த கட்டுரைக்கு