Published:Updated:

நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்ட ஓ.பி.எஸ் தரப்பு - பொதுக்குழு வழக்கில் நடந்தது என்ன?

ஓ.பி.எஸ்

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு பதிலாக வேறு நீதிபதியிடம் வழக்கை மாற்றக் கோரிய ஓ.பி.எஸ் தரப்பு, தற்போது அதற்காக மன்னிப்புக் கோரியிருக்கிறது.

நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்ட ஓ.பி.எஸ் தரப்பு - பொதுக்குழு வழக்கில் நடந்தது என்ன?

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு பதிலாக வேறு நீதிபதியிடம் வழக்கை மாற்றக் கோரிய ஓ.பி.எஸ் தரப்பு, தற்போது அதற்காக மன்னிப்புக் கோரியிருக்கிறது.

Published:Updated:
ஓ.பி.எஸ்

அ.தி.மு.க மூன்றாவது முறையாகப் பிளவுபட்டு, எடப்பாடி தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும், அ.தி.மு.க பெயரை வைத்துக்கொண்டே செயல்பட்டுவருகிறார்கள். ஜூலை 11-ம் தேதி இரண்டாவது முறையாகப் பொதுக்குழு நடைபெற்றபோது அதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டார்.

எடப்பாடி, பன்னீர்
எடப்பாடி, பன்னீர்

அதோடு, `கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசாமல் ஏன் ஒவ்வொரு விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்?’ என்று பன்னீர்செல்வத்துக்குக் கண்டனமும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் பன்னீர்செல்வம். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``எங்களது உத்தரவை, தவறாகப் புரிந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மீண்டும் வழக்கை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து நீதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டது. அந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கடிதம் மூலம் முறையிட்டிருக்கிறோம். அதனால், வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று பன்னீர் தரப்பில் கோரப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உடனடியாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, `என் தீர்ப்பு மீது அதிருப்தியிருந்தால், தாராளமாக மேல்முறையீடு செய்துகொள்ளலாம். அதைவிடுத்து, நீதிபதியையே மாற்ற வேண்டும் என்று நீங்கள் எப்படிக் கேட்கலாம்... இது நீதிமன்றத்தையே களங்கப்படுத்தும் செயல். இதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகூடப் பதியலாம்’ என்று பதிலளித்தார்.

அதன் பிறகும், ஓ.பி.எஸ் தரப்பில் தலைமை நீதிபதியை அணுகியவர்கள், ‘மீண்டும் பன்னீர்செல்வம் குறித்து தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய மனு நிலுவையில் இருக்கும்போது, அதே நீதிபதி வழக்கை விசாரிக்கக் கூடாது’ என்று கோரிக்கை வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லி தலைமை நீதிபதியும் அனுப்பிவிட்டார். இந்நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி வழக்கு மீண்டும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடமே விசாரணைக்கு வந்தது. அப்போது, `வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தங்களிடமே விசாரணையைத் தொடர்கிறோம்’ என்றவாறு பல்டி அடித்திருக்கிறது பன்னீர் தரப்பு.

ஓ.பி.எஸ் தாப்பில் இது பற்றிப் பேசியபோது, `எடப்பாடி தரப்புக்குத் தொடர் வெற்றிகள் குவிந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது எங்களுக்கு முக்கியமான வெற்றி. ஓ.பி.எஸ்-ஸைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தவறாகப் புரிந்துகொண்டு தீர்ப்பளித்ததும் அதே நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிதான். அதனால்தான், அவருக்கு பதிலாக வேறொருவருக்கு வழக்கை மாற்றக் கோரினோம்.

இரண்டாவது முறையும் நீதிபதி விமர்சனம் செய்ததால்தான் நாங்களும் மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட்டோம். ஆனால், இதில் தலைமை நீதிபதி எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. அதனால், இதற்கு மேலும் தாமதித்தால் உச்ச நீதிமன்றத்தில் குட்டுவாங்க நேரிடும் என்பதால், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மன்னிப்புக் கோரும் நிலை ஏற்பட்டது.

ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்
ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்

அப்போது நீதிபதி, ‘இரண்டு நாள்களுக்கு முன்பு என்னிடம் சொல்லியிருந்தால் நானே வழக்கிலிருந்து விலகியிருப்பேன்’ என்று சொன்னார். அதோடு, மன்னிப்புக் கேட்டதை மனுவாகத் தாக்கல் செய்வதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வாங்கி வழக்கை நடத்துவதால், அதைக் கருத்தில்கொண்டே நீதிபதி விசாரிணை நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கெனவே இரண்டு முறை இந்த வழக்கை விசாரித்து கருத்தை வெளிப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த வழக்கை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது எனக் கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில், தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழுக்கூட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்துள்ளார். விரைவில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.