Published:Updated:

லியாண்டர் பயஸ் குடும்ப வன்முறை வழக்கு: `லிவ்-இன் உறவில் உள்ள பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை!'

Leander Paes & Rhea Pillai ( insta images )

``திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆணாதிக்க சமூகம் பல அநீதிகளை இழைத்துள்ளது. அத்தகைய பெண்களுக்கான சட்ட நடவடிக்கைகளுமே போதுமானதாக இல்லை.’’

லியாண்டர் பயஸ் குடும்ப வன்முறை வழக்கு: `லிவ்-இன் உறவில் உள்ள பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை!'

``திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆணாதிக்க சமூகம் பல அநீதிகளை இழைத்துள்ளது. அத்தகைய பெண்களுக்கான சட்ட நடவடிக்கைகளுமே போதுமானதாக இல்லை.’’

Published:Updated:
Leander Paes & Rhea Pillai ( insta images )

இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ் (Leander Paes), இரியா பிள்ளைக்கு (Rhea Pillai) தான் ரூ. 1.5 லட்சம் செலுத்த வேண்டும் என்ற பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரரான லியாண்டர் பயஸ், இரியா பிள்ளை என்ற பிரபல மாடலுடன் 2003-ம் ஆண்டில் இருந்து டேட்டிங் செய்து வந்துள்ளார். 2005-ம் ஆண்டு முதல், இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினார்கள். 2006-ம் ஆண்டில் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. 

couples
couples
pixabay

பிறகு இந்த ஜோடி, பாந்தாராவுக்கு இடம் பெயர்ந்தது. பயஸின் தந்தை அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து தங்கினார். இந்த சூழலில், இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு முரண்படத் தொடங்கினர். 

தன் மகளை, தன்னுடைய பாதுகாப்பில் அனுப்புமாறு பயஸ் தரப்பில் பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இரியா பிள்ளையும் 2014-ல் குடும்ப வன்முறை வழக்கைத் தொடுத்தார்.

இவ்வழக்கை பிப்ரவரி மாதம் விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஒரு பெண் லிவ்-இன் உறவுக்குள் செல்லும்போது, சட்டத்தின் பார்வையில் இருந்தும், சமூகத்தின் பார்வையில் இருந்தும் எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டியது. 

அதில், ``திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள் இன்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சட்டத்துக்கும் ஒழுக்கத்துக்கும் இடையில் இவை மோதலுக்கு வழிவகுக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய உறவு, குறிப்பாகப் பெண்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆணாதிக்க சமூகம் பல அநீதிகளை இழைத்துள்ளது. அத்தகைய பெண்களுக்கான சட்ட நடவடிக்கைகளுமே போதுமானதாக இல்லை, இதன் விளைவாகப் பெண்கள் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர்.   

லியாண்டர் பயஸ் குடும்ப வன்முறை வழக்கு: `லிவ்-இன் உறவில் உள்ள பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை!'

பயஸ், பல குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறார். எனவே, பாந்தரா கார்ட்டர் ரோட்டில் உள்ள பிளாட்டில் இருந்து இரண்டு மாதத்துக்குள் இரியா பிள்ளையும், குழந்தையும் வெளியேற வேண்டுமெனில், 1 லட்சம் ரூபாய் மாத பராமரிப்புக்காகவும், 50,000 ரூபாய் மாத வாடகைக்காகவும், மொத்தம் 1.5 லட்சம் செலுத்த வேண்டும்’’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, பயஸ் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் ``தனக்கும் இரியா பிள்ளைக்கும் இடையேயான உறவு, திருமண இயல்பில் இல்லை. நாங்கள் இருவரும் 2005-ம் ஆண்டு சந்தித்துக் கொண்டோம். 2006-ல் ஒரு மகள் பிறந்தாள். குழந்தை பிறந்த பிறகு, எங்களின் உறவு முறிந்துவிட்டது, குழந்தையின் நலனுக்காகவே அன்பாக இருந்தேன்.

2008-ம் ஆண்டு, சஞ்சய் தத் என்ற நடிகரை இரியா பிள்ளை திருமணம் செய்துகொண்டார். விவாகரத்தின்போது என்னிடமிருந்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்கு மாடி குடியிருப்பைப் பெற்றார். இவரால் பொருளாதார ரீதியாகச் சுமையைப் பெற்றுள்ளேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

வழக்கின் நிலவரம் அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும்.