Published:Updated:

பெகாசஸ் உளவு: ``மத்திய பாஜக அரசு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை!" - ஆய்வுக்குழு நீதிமன்றத்தில் தகவல்

பெகாசஸ்

பெகாசஸ் உளவு வழக்கு குறித்து ஆய்வுசெய்த குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெகாசஸ் உளவு: ``மத்திய பாஜக அரசு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை!" - ஆய்வுக்குழு நீதிமன்றத்தில் தகவல்

பெகாசஸ் உளவு வழக்கு குறித்து ஆய்வுசெய்த குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
பெகாசஸ்

பெகாசஸ் உளவு மென்பொருள் என்பது இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் என்.எஸ்.ஓ அமைப்பின் தயாரிப்பு. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கு இந்த மென்பொருளை விற்பனை செய்துவருகிறது. நாட்டுக்கு எதிராகச் சதி செய்பவர்களைக் கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா - இஸ்ரேல் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை ஆகியவை இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

பெகாசஸ் ஸ்பைவேர்
பெகாசஸ் ஸ்பைவேர்

அதைத் தொடர்ந்து, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு அந்த உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியப் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களை உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதிலும் அமளியில் ஈடுபட்டனர்.

பெகாசஸ் செயலி
பெகாசஸ் செயலி

இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர்கொண்ட விசாரணைக்குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. மேலும், 'இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட அலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க, அவர்கள் குறித்தான தரவுகளைச் சேகரிக்க, இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா... இந்திய அரசே இந்திய மக்களை உளவு பார்த்ததா... ஒருவேளை இந்திய அரசு உளவு பார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட தகவல்களை விசாரணைக்குழு வழங்க வேண்டும்' என வழிகாட்டுதலையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பெகாசஸ்
பெகாசஸ்
Pixabay

இந்த நிலையில், மூன்று பேர்கொண்ட விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், ``29 செல்போன்களை ஆய்வு செய்ததில் ஐந்தில் உளவு மென்பொருள் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், அது பெகாசஸ் மென்பொருளா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்தான மேலதிக விசாரணைக்கு மத்திய பா.ஜ.க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, சிலர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான தகவல்கள் இருப்பதால் அதை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, ஆய்வறிக்கையில் எந்தப் பகுதியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருக்கின்றனர்.