Published:Updated:

"நிலுவையில் 5 கோடி வழக்குகள்; கீழமை நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதியில்லை!" - கிரண் ரிஜிஜு

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

``கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4.8 கோடியாக இருந்தது.'' - மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

"நிலுவையில் 5 கோடி வழக்குகள்; கீழமை நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதியில்லை!" - கிரண் ரிஜிஜு

``கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4.8 கோடியாக இருந்தது.'' - மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

Published:Updated:
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கவிருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு, அவை பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``இந்தியாவில் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அடுத்த சில மாதங்களில் 5 கோடியாக உயரவிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4.8 கோடியாக இருந்தது.

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் கீழமை நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்புகள் இல்லை. இதனை மேம்படுத்துவது எங்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது குறித்த பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. கூடிய விரைவில் இந்திய நீதித்துறை காகிதமில்லா துறையாக மாறும். இணைய வழியில் நீதிமன்றங்கள் இயங்கும். டிஜிட்டல் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குவதில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். இணைய வழியில் நீதிமன்றங்கள் இயங்குவதால், மக்களுக்கு நேரம் மிச்சப்படும். அனைத்துவித ஆவணங்களும் ஒரு கிளிக்கில் கிடைத்துவிடும். இதனால், நீதித்துறையின் செயல்பாடுகள் வேகம் எடுக்கும்" என்று கூறி முடித்தார்.