Published:Updated:

பெரியார் சிலைகளில் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக்கோரிய வழக்கு! - தமிழ்நாடு அரசின் பதில் என்ன?!

பெரியார் சிலை

``கடவுள் உண்டு என்று கருத்துக் கூற உரிமை இருக்கிறதோ அதேபோல கடவுள் இல்லை என்று செல்வதற்கும் உரிமை இருக்கிறது" - நீதிமன்றம்

பெரியார் சிலைகளில் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக்கோரிய வழக்கு! - தமிழ்நாடு அரசின் பதில் என்ன?!

``கடவுள் உண்டு என்று கருத்துக் கூற உரிமை இருக்கிறதோ அதேபோல கடவுள் இல்லை என்று செல்வதற்கும் உரிமை இருக்கிறது" - நீதிமன்றம்

Published:Updated:
பெரியார் சிலை

பெரியாருக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சிலைகள் அமைந்திருக்கிறது. இந்த சிலைகளின் கீழ் பெரியார் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.தெய்வநாயகம் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையில், ``கடவுள் உண்டு என்று கருத்துக் கூற உரிமை இருக்கிறதோ அதேபோல கடவுள் இல்லை என்று செல்வதற்கும் உரிமை இருக்கிறது" என்று கூறி நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. 

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்த சூழலில், தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ``பெரியார் சிலை விவகாரத்தில் அதன் பராமரிப்புக்காகத் தமிழ்நாடு அரசு தரப்பில் தொகை ஒதுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. அதேநேரம் இந்த வாசகங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. பேச்சுரிமை, கருத்துரிமை என்ற அடிப்படையில் மனதைப் புண்படுத்தும் வாசகங்களை அனுமதிக்கக் கூடாது. எனவே, இவற்றை அகற்ற வேண்டும்" எனக்கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த மனு மீது தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கண்ணதாசன்
கண்ணதாசன்

இதுகுறித்து, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசனிடம் கேட்டபோது, ``இதுகுறித்து ஏற்கனவே, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்தது. அப்போது, கடவுள் இல்லை என்று சொல்வது அவர்களுடைய உரிமை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, மதுரை நீதிமன்றத்தில் போட்ட வழக்கை மறைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றமும், ``கடவுள் இல்லை என்று சொல்வது அவர்களது கருத்துரிமை. அதில் தலையிட முடியாது" என்று கூறியது. இதே வழக்கைத் தான் உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்துள்ளார்கள். இதே கருத்தைத் தான் உச்ச நீதிமன்றமும் சொல்லும் என நம்புகிறோம். கடவுள் இருக்கிறது என்று கூறுவதற்கு உரிமை இருக்கும் போது கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் உரிமை இருக்கிறது தானே? இதுபோன்ற வாதங்களைத் தான் தமிழக அரசு முன்வைக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.