Published:Updated:

`நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறோம்’-நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய விவகாரத்தில் பிரியங்கா காந்தி கணவர்

ராபர்ட் வதேரா

வெளிநாடு செல்ல கோர்ட் விதித்திருந்த நிபந்தனையை மீறியதற்காக கோர்ட்டில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

`நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறோம்’-நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய விவகாரத்தில் பிரியங்கா காந்தி கணவர்

வெளிநாடு செல்ல கோர்ட் விதித்திருந்த நிபந்தனையை மீறியதற்காக கோர்ட்டில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

Published:Updated:
ராபர்ட் வதேரா

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கப் பிரிவு பண மோசடி வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா தற்போது ஜாமீனில் இருக்கிறார். ராபர்ட் வதேரா கடந்த மாதம் 12-ம் தேதியிலிருந்து நான்கு வாரங்களுக்குகு இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று வர சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. பயணத் திட்டத்தில் இங்கிலாந்துக்கு துபாய் வழியாகச் செல்வதாக ராபர்ட் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பயணத்தின்போது ராபர்ட் வதேரா துபாயில் 25-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி வரை தங்கியிருந்துவிட்டு பிரிட்டனுக்குச் சென்றிருக்கிறார்.

வெளிநாடு சென்று வர கோர்ட் விதித்திருந்த நிபந்தனையை ராபர்ட் வதேரா மீறி துபாயில் நான்கு நாள்கள் தங்கியிருந்திருக்கிறார். இது குறித்து நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மருத்துவக் காரணங்களுக்காக துபாயில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். ராபர்ட் சார்பாக வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி துபாய் வழியாகச் செல்ல வேண்டும் என்பதற்கு பதில் துபாய் சென்றது தவறுதான் என்றும், அதை நாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், வழக்கறிஞர் தெரிவித்தார்.

மனைவியுடன் ராபர்ட்
மனைவியுடன் ராபர்ட்
KALINGA

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் கோர்ட்டில் கொடுத்துள்ள டெபாசிட் தொகையை கோர்ட் கையகப்படுத்த வேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் வாதிட்டார். ராபர்ட் வதேராவின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி நிலோபர், `போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஏன் டெபாசிட் தொகையை கோர்ட் கையகப்படுத்தக் கூடாது?’ என்று கேட்டு ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் கொடுக்க உத்தரவிட்டார். `ராபர்ட் வதேரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தை ஏற்க முடியாது’ என்றும், `ராபர்ட் வதேராவின் டிக்கெட்டை ஆய்வுசெய்ததில் அவர் துபாயில் தங்கிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெளிவாகத் தெரிகிறது’ என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.