Published:Updated:

`மருத்துவப் படிப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு தகுதிக்கு முரணானது இல்லை!' - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் 27 சதவிகித ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சரியானதுதான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

`மருத்துவப் படிப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு தகுதிக்கு முரணானது இல்லை!' - உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் 27 சதவிகித ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சரியானதுதான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

`மருத்துவப் படிப்பில் 27% ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சரியானதுதான்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும் இந்தக் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டிருந்தது.

மருத்துவ மாணவர்கள்
மருத்துவ மாணவர்கள்

இந்த நிலையில், ஓ.பி.சி இட ஒதுக்கீடு செல்லும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் 27% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு புதிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு தகுதிக்கு முரணானது இல்லை என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதற்கு உச்ச நீதிமன்றத்திடமிருந்து ஒப்புதல் பெறத் தேவையில்லை எனவும் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இது அகில இந்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் இதை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது என ஓபிசி இட ஒதுக்கீடு செல்லும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மார்ச் மூன்றாவது வாரத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism