Published:Updated:

`தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் குறித்து நீதிபதிகள் முடிவெடுக்க முடியாது’: பா.ஜ.க எம்பி சுஷில் மோடி

``தன்பாலின ஈர்ப்புத் திருமணம் தொடர்பான விஷயத்தில், நாட்டின் கலாசார பண்பாட்டுக்கு எதிரான எந்த உத்தரவையும் நீதித்துறை வழங்கக் கூடாது” - சுஷில்குமார் மோடி

Published:Updated:

`தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் குறித்து நீதிபதிகள் முடிவெடுக்க முடியாது’: பா.ஜ.க எம்பி சுஷில் மோடி

``தன்பாலின ஈர்ப்புத் திருமணம் தொடர்பான விஷயத்தில், நாட்டின் கலாசார பண்பாட்டுக்கு எதிரான எந்த உத்தரவையும் நீதித்துறை வழங்கக் கூடாது” - சுஷில்குமார் மோடி

`தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் குறித்து இரு நீதிபதிகள் மட்டும் சேர்ந்து முடிவெடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் இதற்கென தனி விவாதம் தேவை’ என்று பா.ஜ.க எம்.பி சுஷில் மோடி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர் நுபுர் குமார் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் 1954-ன் கீழ் தன்பாலின ஈர்ப்பாளர் திருமணங்களை அங்கீகரிக்கக் கோரிய இந்த மனுக்களை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த நவம்பர் 25-ம் தேதி, இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசுக்கும், அட்டர்னி ஜெனரலுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஸீரோ அவரில் (Zero Hour) பேசிய பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில்குமார் மோடி, ``தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் தொடர்பான விஷயத்தில், நாட்டின் கலாசார பண்பாட்டுக்கு எதிரான எந்த உத்தரவையும் நீதித்துறை வழங்கக் கூடாது. சில இடதுசாரி தாராளவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோர், மேற்கத்திய சித்தாந்தத்தைப் பின்பற்றுவதால் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்” என்று கூறினார்.

மேலும், ``திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை மட்டும் குறிக்கிறது. ஆசியாவை பொறுத்தவரை தைவானில் மட்டுமே தன்பாலின திருமணம் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படவோ, அங்கீகரிக்கப்படவோ இல்லை.

`தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் குறித்து நீதிபதிகள் முடிவெடுக்க முடியாது’: பா.ஜ.க எம்பி சுஷில் மோடி

தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப் பட்டால், அதன் விளைவாகத் தத்தெடுப்பு, குடும்ப வன்முறை, விவாகரத்து உள்ளிட்டவை தொடர்பான சட்டங்களில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து இரண்டு நீதிபதிகள் மட்டும் முடிவு செய்திட முடியாது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

2018-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் தன்பாலினச் சேர்க்கை குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.