Published:Updated:

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களைக் கண்காணிக்க பறக்கும்படை... அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்

``மண்டல மற்றும் மாவட்ட அளவில் தேவையான எண்ணிக்கையில் பறக்கும் படைகளை (Flying Squads) அமைக்க வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களைக் கண்காணிக்க பறக்கும்படை... அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

``மண்டல மற்றும் மாவட்ட அளவில் தேவையான எண்ணிக்கையில் பறக்கும் படைகளை (Flying Squads) அமைக்க வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
சென்னை உயர்நீதிமன்றம்

``அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி பணிபுரிகிறார்களா என்பதை உறுதிப்படுத்த, மண்டல மற்றும் மாவட்ட அளவில் தேவையான எண்ணிக்கையில் பறக்கும் படைகளை (Flying Squads) அமைக்க வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court order
court order

2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி, எஸ்.முத்துமணிமலை என்பவருக்கு எதிராக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அந்த வழக்கில், சிறப்பு மருந்துகளை அவர் அதிகமாக வாங்கியதால், அரசின் கருவூலத்துக்கு ஏற்பட்ட இழப்பைச்  சமன் செய்ய 56. 45 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். அதோடு அவர் ஓய்வு பெற்றாலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய தொகையை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில், தனக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து, ஓய்வூதியத்தை வழங்க கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார், எஸ்.முத்துமணிமலை. 

இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில், ``இந்த உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். 

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களைக் கண்காணிக்க பறக்கும்படை... அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

மனுதாரர் விசாரணை நடவடிக்கைகளை முடிப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி ஒத்துழைப்பு தர மறுத்து கால தாமதம் ஏற்படும்பட்சத்தில், அதை அதிகாரிகள் பதிவு  செய்வார்கள். அத்தகைய சூழலில் மனுதாரருக்கு எந்த நிவாரணமும் பெற உரிமை இல்லை.

அதோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி பணிபுரிகிறார்களா என்பதை உறுதிப்படுத்த, மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை (Flying Squads) அமைக்க வேண்டும். அந்தப் பறக்கும் படைகளை அந்தத் துறையின் தலைவர் அல்லது  அரசு கண்காணிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.