Published:Updated:

``கே.என்.நேரு சகோதரரான ராமஜெயம் கொலை வழக்கை இனி SIT விசாரிக்கும்!"- உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

`இத்தனை ஆண்டுகளாக கொலை வழக்கினை சிபிசிஐடி, சிபிஐ என விசாரித்தும் இதுவரை கொலைக்கான நோக்கம் கூட கண்டுபிடிக்கப்படாததால், இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றுவதாக” சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

``கே.என்.நேரு சகோதரரான ராமஜெயம் கொலை வழக்கை இனி SIT விசாரிக்கும்!"- உயர் நீதிமன்றம் உத்தரவு

`இத்தனை ஆண்டுகளாக கொலை வழக்கினை சிபிசிஐடி, சிபிஐ என விசாரித்தும் இதுவரை கொலைக்கான நோக்கம் கூட கண்டுபிடிக்கப்படாததால், இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றுவதாக” சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

திமுக-வை சேர்ந்த அமைச்சர் கே.என். நேரு-வின் சகோதரரான கே.என். ராமஜெயம், 2012 மார்ச் 29-ம் தேதி, திருச்சி-கல்லணை சாலையிலுள்ள திருவளர்சோலை எனும் பகுதியில் முட்புதர்க்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த கொலையினை திருச்சி மாநகர போலீஸார் விசாரித்ததில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், 2012-ல் இந்த கொலைவழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி-யினரும் 12 தனிப்படைகள் அமைத்து விசாரித்தும் குற்றவாளிகள் யார் என கண்டறியப்படாமலே இருந்தது. அதையடுத்து கொலைசெய்யப்பட்டவரின் மனைவி, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என கோரிக்கை மனு அளித்ததையடுத்து, 2017-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி, மூன்று மாதங்களில் முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ விசாரித்ததிலும் ஏதும் கண்டறியப்படாததால் ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கு

இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளாக ராமஜெயம் கொலை வழக்கினை சிபிசிஐடி, சிபிஐ என விசாரித்தும் இதுவரை குற்றவாளி யார், கொலைக்கான நோக்கம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படாததால், இனி இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT) விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், ``கொலை நடந்து10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கொலைக்கான நோக்கத்தினை கூட சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ கண்டுபிடிக்கவில்லை. இனியும் இதை தள்ளிப்போடாமல், தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடுகிறேன். இந்த விசாரணை பிப்ரவரி 21-க்குள் தொடங்கினால் நல்லது. மேலும் இந்த விசாரணையில் முதற்கட்ட அறிக்கை மார்ச் 7-ம் தேதி தாக்கல் செய்யவேண்டும்" என உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism