Published:Updated:

`தேர்தலை ஒத்திவைக்க ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?' - திருப்புவனம் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

சிவகங்கை
சிவகங்கை

திருப்புவனம் யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்டத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை நியமனம் செய்து விரைவில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்த வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் குழப்பான சூழலில் நடைபெற்றது. குறிப்பாக, சாக்கோட்டை சங்கராபுரம் தேர்தல், மாவட்ட கவுன்சிலர்களுக்கான மறைமுகத் தேர்தல் என்று பல திசையில் இடியாப்ப சிக்கல் நீடிக்கிறது.

கோப்புப் படம்
கோப்புப் படம்

இதேபோல் திருப்புவனம் தேர்தலை நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் எனத் தொடர்ந்து 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுப்பையா என்பவர் மனு ஒன்றை அளித்தார், `சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனில் 12-வது வார்டு கவுன்சிலராகப் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டேன். திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க-தான் அதிக இடங்களைப் பிடித்து திருப்புவனம் ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றும் நிலையில் இருந்தது.

hc madurai
hc madurai

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலுக்காக அனைத்து கவுன்சிலர்களும் வந்திருந்தனர். காலை 11 மணிக்குத் தேர்தல் என்ற நிலையில் 10.15 மணி அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தைக் காட்டி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்துத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இது ஏற்புடையதல்ல ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துள்ளனர். எனவே, திருப்புவனம் யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை நியமனம் செய்து விரைவில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிவிப்பு
அறிவிப்பு

மேலும், `வழக்கறிஞர் குழு அமைத்து கண்காணிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கிருஷ்ணவள்ளி அமர்வு, `சட்ட ஒழுங்கு பிரச்னைக்காகத் தேர்தலை ஒத்திவைத்தால், பக்கத்து மாநில போலீஸைக் கொண்டு, தேர்தலை நடத்தலாமே..?" எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, `தேர்தலை ஒத்திவைக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், `அதிகாரம் உள்ளது' எனப் பதிலளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு