Published:Updated:

`உதவித்தொகை வாங்கித் தருகிறேன்’... மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

பாலியல் கொடுமை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த செங்கல்சூளை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

`உதவித்தொகை வாங்கித் தருகிறேன்’... மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த செங்கல்சூளை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Published:Updated:
பாலியல் கொடுமை

வழக்கு 1:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (41). செங்கல்சூளை வைத்து நடத்திவருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு பெற்றோரை இழந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அரசின் நிதி உதவி பெற்றுத் தருவதாக சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதற்காக மாணவியின் வீட்டுக்குச் சென்ற அவர், ``நிதியுதவி பெறுவதற்கு மாணவியின் பாஸ்போர்ட் அளவு போட்டோ தேவைப்படுகிறது. எனவே அவரை என்னுடன் அழைத்துச் சென்று, போட்டோ எடுத்துக்கொண்டு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்துவிட்டு திரும்ப அழைத்து வந்துவிடுகிறேன்” என கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் உறவினர்கள் சுரேஷ்குமாரைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் மாணவி படிக்கும் பள்ளிக்குச் சென்ற சுரேஷ்குமார், பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரைச் சந்தித்து, ``மாணவிக்கு உதவித்தொகை வாங்கித் தர ஏற்பாடு செய்துள்ளேன். ஆகவே மாணவியை என்னோடு அனுப்பி வையுங்கள்” எனக் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து தலைமையாசிரியரும் சுரேஷ்குமாரைத் திட்டி அனுப்பியதாகத் தெரிகிறது.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

இந்நிலையில், சுரேஷ்குமாரின் உறவினர் கலா என்பவர் அப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து கலாவிடம் விஷயத்தைச் சொல்லி, ``மாணவியைத் தன்னோடு 10 நிமிடங்கள் மட்டும் அழைத்துச்செல்ல அனுமதியுங்கள். நான் மீண்டும் பத்திரமாக அவரைத் திரும்ப அழைத்து வந்துவிடுகிறேன்” எனக் கூறியுள்ளார். இதை நம்பிய கலாவும், மாணவியைத் தனியே அழைத்து சுரேஷ்குமாருடன் சென்று வருமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பிவைத்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் பள்ளிச்சீருடையுடன் தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல் அங்கிருந்து கிளம்பிய மாணவியை, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நென்மேனி கண்மாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார் சுரேஷ்குமார். இதை அங்கு கால்நடை மேய்ச்சலுக்காக நின்றிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து, கண்மாயின் பள்ளமான இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ்குமார், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, அவரை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார். பள்ளிக்கு வந்த சிறுமி வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் இருந்ததால் சந்தேகமடைந்த அவரின் தோழிகள் என்ன நடந்ததென்று விசாரித்துள்ளனர். ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த மாணவி, பள்ளிவிட்டதும் நேரே வீட்டுக்குச் சென்று, தனது உறவினர்களிடம் நடந்த விவரங்களைக் கூறி அழுதுள்ளார். இதற்கிடையே, அங்கு வந்த மேய்ச்சல்காரர்களும் மாணவியை சுரேஷ்குமார் அழைத்துச் சென்றதையும் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேஷ்குமார், கலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவந்த நிலையில் தற்போது ‌தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் பரிந்துரை செய்தார். சுரேஷ்குமாரின் உறவினர் கலா விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் செல்வி ஜே.கலா ஆஜராகி வாதாடினார்.

வழக்கு 2:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா மாலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெந்நி என்ற அய்யனார் (53). அப்பகுதியில் குடிநீர் திறந்துவிடும் பணியாளராக வேலை செய்துவந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு 13 வயதுள்ள மனநலம்குன்றிய சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவத்தன்று இரவு தனது உறவினரோடு தெருமுனையில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றுள்ளார். கடையில் பொருள்களை வாங்கிய உறவினர், அதை மனநலம்குன்றிய சிறுமியிடம் கொடுத்து "நீ வீட்டுக்கு போ, நான் பக்கத்துல தோழி வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்" என்று கூறி அனுப்பியுள்ளார். பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்துவந்த சிறுமியை, தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அய்யனார், வாயை மூடி கடத்திச் சென்றுள்ளார்.

வெந்நி என்ற அய்யனார்
வெந்நி என்ற அய்யனார்


தொடர்ந்து அருகே இருந்த இருட்டான இடத்தில் பாழடைந்த வீட்டினுன் வைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இந்த சமயம், சிறுமியின் உறவினர் வீட்டுக்கு திரும்பி வரவும் வீட்டில் சிறுமி இல்லாததைக் கண்டு பதற்றமடைந்து பக்கத்து இடங்களில் தேடியிள்ளார். அப்போது பாழடைந்து கிடந்த வீட்டின் உள்ளிருந்து சிறுமியின் சத்தம் கேட்டதால் டார்ச்லைட் வெளிச்சம் உதவியுடன் அங்கே சென்று பார்த்துள்ளார். சிறுமியின் உறவினர்கள் வருவதை அறிந்த அய்யனார் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. தப்பி ஓடியது அய்யனார்தான் என்பதை அடையாளம் கண்டுகொண்ட சிறுமியின் உறவினர் இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அய்யனாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தீர்ப்பு
தீர்ப்பு

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்துவந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அய்யனாருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 366-ன் படி 10 வருட சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், போக்சோ பிரிவின் கீழ் 10 வருட சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் என மொத்தம் 20 ஆண்டு சிறைத் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவர் பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் செல்வி ஜே.கலா ஆஜராகி வாதாடினார்.