Published:Updated:

``மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா?" - உச்ச நீதிமன்றக் கேள்விக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு பதில் இதுதான்!

உச்ச நீதிமன்றம்

பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

``மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா?" - உச்ச நீதிமன்றக் கேள்விக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு பதில் இதுதான்!

பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

ஒற்றைத் தலைமை விவகாரம் அ.தி.மு.க-வில் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, அந்தக் கட்சி இரண்டாக உடைந்துபோனது. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளைத் தன்வசம் வைத்திருக்கும் இ.பி.எஸ்., அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். அதேசமயத்தில் ஓபிஎஸ்-ஸும் அவர் ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக இ.பி.எஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. பதிலுக்கு ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ் உட்பட அவரின் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து இ.பி.எஸ் தலைமையிலான பொதுக்குழுவின் முடிவுகள் செல்லாது என ஓ.பி.எஸ் தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இ.பி.எஸ் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

இந்த நிலையில், பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு தரப்பினருக்கும் பொதுவாக, பொதுக்குழு தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன எனக் கேள்வியெழுப்பினர். மேலும், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்புகள் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதற்கு இரு தரப்புமே இணைய வாய்ப்பில்லை என பதிலளித்தன. அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பு, ``பொதுக்குழுவில் கட்சியின் அடிப்படை விதிகள் அனைத்தும் மீறப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இது குறித்த சிவில் வழக்குகளும் முழுமையாகப் பரிசீலனை செய்யப்படவில்லை" என்ற வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இறுதியாக இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவிட்டது.

அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே, `இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுக்கும், நாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை’ எனக் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.