Published:Updated:

'கொலிஜியம் பரிந்துரைகள் தாமதம்'... மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி - பின்னணி என்ன?!

உச்சநீதிமன்றம்

``கொலிஜியம் பரிந்துரைகளை தாமதிப்பது ஏமாற்றதை ஏற்படுத்துகிறது" என்று மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?!

'கொலிஜியம் பரிந்துரைகள் தாமதம்'... மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி - பின்னணி என்ன?!

``கொலிஜியம் பரிந்துரைகளை தாமதிப்பது ஏமாற்றதை ஏற்படுத்துகிறது" என்று மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?!

Published:Updated:
உச்சநீதிமன்றம்

நாட்டில் பல்வேறு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அதனை மத்திய அரசு ஏற்று நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததையடுத்து, 'கொலிஜியம் பறித்துரைத்ததும் அதை 3-4 வாரங்களுக்குள் ஏற்று நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியம் பரித்துரைத்திருக்கும் பெயர்களில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதன் காரணத்தை குறிப்பிட்டு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்' ' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது எனச் சொல்லப்படுகிறது.

நீதித்துறை
நீதித்துறை

இதுகுறித்து பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், `உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு அசாதாரணமான தாமத போக்கை கடைபிடிக்கிறது. கொலிஜியம் பரித்துரையின் மீதும் முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த விவகாரத்திற்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், "நீதிபதிகள் காலியிடங்கள் நிரப்பப்படுவதற்கு உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு கால உச்சவரம்பை (3-4 வாரங்கள்) நிர்ணயம் செய்து, அது நடைமுறையில் இருக்கிறது. இந்த கால உச்சவரம்பு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

ஆனால் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் அனுப்பியிருக்கும் பெயர்களில் சிலவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாமதிப்பது, நியாமன நடைமுறை மீது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தாமதித்தால் நீதித்துறை எவ்வாறு செயல்பட முடியும்?. சில சமயங்களில் கொலிஜியம் பரிந்துரைக்கும் பெயர்களில் ஒரு பெயருக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளிப்பது பணிமூப்பு நிலையை கடுமையாக பாதிக்கிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்திருக்கிறது. கொலிஜியம் நடைமுறைக்கு மாற்றாக 2மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் ஆணையச் சட்டத்தை ரத்து செய்ததுதான், நீதிபதிகள் நியமன பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதிப்பதற்கான காரணமோ என்று தோன்றுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு மத்திய அரசு நடக்காமல் இருப்பதற்கு இதுபோன்ற அதிருப்தியை காரணமாகத் தெரிவிக்க முடியாது. கொலிஜியம் பரிந்துரைத்த பெயர்களை தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் மத்திய அரசு எல்லை மீறுகிறது. கடந்த 2 மாதங்களாக எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இந்த விசாரணையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் இருவரும் ஆஜராகி இருக்கிறீர்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காண இருவரும் எதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம் சார்பில் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டாம். சட்டம் நடைமுறையில் இருக்கும் போது அதை பின்பற்றியாக வேண்டும். எனவே சட்டத்தை முறையாகப் பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு அட்டர்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் ஆலோசனை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மத்திய அரசு
மத்திய அரசு

முன்னதாக கொலிஜியம் என்றழைக்கப்படும் நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் முறையை மாற்றி, மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் இரண்டு முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 6 பேரை உள்ளடக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தையும் கடந்த 2014-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "ஏற்கெனவே நமது நாட்டில் போதுமான அளவுக்கு நீதிபதிகளோ, நீதிமன்றமோ இல்லை. நீதிமன்றங்களில் 2 தலைமுறை வழக்குகள் தேங்கி நிற்கிறது. கொலிஜியம் என்பது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் மூத்த நீதிபதிகள் அடங்கிய அமைப்பு. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டுவிட்டது. கொலிஜியம் பரிந்துரை கொடுத்துவிட்டால் அவர்கள் நீதிபதிகள் ஆனதாகதான் அர்த்தம். அதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது தங்களுக்கு சாதகமானவர்கள் வர வேண்டும் என்பதற்காக காத்திருப்பதாக தெரிகிறது. நீதித்துறையின் மீது எந்த துறையும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அவ்வாறு செலுத்தினால் தவறான நீதி வழங்குவதற்கு மனச்சாய்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

'கொலிஜியம் பரிந்துரைகள் தாமதம்'... மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி - பின்னணி என்ன?!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "கொலிஜியம் அமைப்பு என்பது உச்ச நீதிமன்றத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அது மத்திய அரசிடம் பரிந்துரை செய்யும் போது மத்திய அரசுக்கு என்று சில அளவுகோல்கள் இருக்கின்றன. அதேபோல் நீதிமன்றத்திற்கு என்று ஒரு சில அளவுகோல் இருக்கின்றன. அப்போது மத்திய அரசு ஒருசில காரணங்களுக்காக இந்த பரிந்துரைகளில் சிலருடைய பெயர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொன்னால் அதுகுறித்து நீதித்துறையும், மத்திய அரசும் இணைத்து பேசி அதற்கான ஒரு முடிவை எட்டுவதுதான் இயல்பானதாக இருக்க முடியும். காரணங்கள் குறித்து மத்திய அரசும் சரி, நீதித்துறையும் சரி வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம். ஆனால் மத்திய அரசும் சரி, நீதித்துறையும் இணைத்து பணியாற்றி இதற்கான ஒரு தீர்வை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.