Published:Updated:

`ஆகஸ்ட் 2-ல் விசாரிக்கிறோம்; நிகழ்வுகளைக் கோப்பில் சேர்க்கவும்!' - அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம்

நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மூன்று நபர் பேச்சுவார்த்தைக் குழு இந்த விவகாரத்தில் தங்களது கோப்புகளை அளித்தபிறகு, உச்ச நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

பாபர் மசூதி
பாபர் மசூதி

அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து, வரும் ஆகஸ்ட் 2-ல் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி
அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி

நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மூன்று நபர் பேச்சுவார்த்தைக் குழு இந்த விவகாரத்தில் தங்களது கோப்புகளை அளித்தபிறகு, உச்ச நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "ஆகஸ்ட் 2-ல் இதுகுறித்து விசாரிக்கப்படும். ஆகவே, இந்த விவகாரம் குறித்து ஜூலை 31-ம் தேதி வரையிலான நிகழ்வுகளை மூவர் குழு தங்கள் கோப்பில் சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி
அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி

ஜூலை 18-க்குள் மூவர் குழு தங்களது பேச்சுவார்த்தை முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 11-ல் தெரிவித்தது. மூவர் பேச்சுவார்த்தைக் குழுவில், ஜஸ்டிஸ் கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடக்கம்.

Vikatan

பல வருடங்களுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் இந்த வழக்கில், விரைந்து முடிவெடுக்க மூவர் குழுவைக் கடந்த மார்ச் 8-ம் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான ஐவர் அமர்வு நியமித்தது.