Published:Updated:

``எங்கள் பக்கம் இருந்த நியாயம் தான் எங்களுக்கு வலிமை கொடுத்தது!” - விடுதலைக்குப் பின் பேரறிவாளன்

பேரறிவாளன்
Live Update
பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்ற பேரறிவாளன் வழக்கில் அவரை விடுதலை செய்து என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததது.

18 May 2022 1 PM

பேரறிவாளன் விடுதலை: ``நீதிக்கு இது ஒரு போராட்டம்... நிச்சயம் உலகம் பாராட்டும்!" - நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ்

``தம்பி பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அற்புதம் அம்மாள் அவர்களுக்கும், விடியல் தாசன் ஐயா அவர்களுக்கும், அறிவின் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த விடுதலைக்கு முக்கியக் காரணமாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எனது நன்றிகளும், வணக்கங்களும். அறிவின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கு இது ஒரு போராட்டம்.. நிச்சயம் உலகம் பாராட்டும்."

18 May 2022 12 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எங்கள் பக்கம் இருந்த நியாயம் தான் எங்களுக்கு வலிமை கொடுத்தது!”

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் ``நல்லவருக்கு விளையும் கேடு என்பது போல் தான் எனது சிறைவாசம். நல்லவர்கள் வாழவேண்டும் தீயவர்கள் ஏற வேண்டும் என்பது தான் நியதி. எங்கள் பக்கம் இருந்த நியாயம் தான் எங்களுக்கு வலிமை கொடுத்தது எனது குடும்பம் உறவுகளின் பாசம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

செங்கொடியின் தியாகம், தியாகராஜன் ஐ.பி.எஸ்-ன் வாக்குமூலம், நீதியரசர்கள் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் அவர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
18 May 2022 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

18 May 2022 11 AM

இனிப்பு வழங்கி விடுதலையைக் கொண்டாடிய பேரறிவாளன்!

உச்ச நீதிமன்றம் விடுதலை வழங்கி தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜோலார்பேட்டையிலுள்ள சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கும் பேரறிவாளனை குடும்பத்தினர் கட்டிப்படித்து ஆனந்த கண்ணீரில் மகிழ்ந்தனர். விடுதலையை இனிப்பு வழங்கியும் பேரறிவாளன் கொண்டாடினார்.

18 May 2022 11 AM

ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ``இந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியது தவறு” என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

மேலும், ஆர்ட்டிகிள் 142 -ன் படி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதாவது 161-வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

18 May 2022 10 AM

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. அதாவது, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, ``பேரறிவாளனை விடுவிப்பதே வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. இந்த வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? எந்த விதியின் கீழ் மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகிறீர்கள்? கிரிமினல் வழக்குதானே, கிரிமினல் வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தானே ஆளுநர்" என மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும் இந்த வழக்கில், `உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தினால் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்' என பேரறிவாளன் தரப்பு கூறியிருந்தது. கடந்த 11-ம் தேதியோடு அனைத்து வாதங்கள் முடிவடைந்தன. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னதாக அறிவித்திருந்தபடியே, பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது.

இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ``இந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியது தவறு” என்று கூறியதுடன் அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism