Published:Updated:

வேங்கைவயல்: சிறப்புப் புலனாவுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம்

``குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் இருக்கிறது.'' - உச்ச நீதிமன்றம்

Published:Updated:

வேங்கைவயல்: சிறப்புப் புலனாவுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

``குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் இருக்கிறது.'' - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதியன்று, பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தேக்கத்தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்கப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேங்கைவயல்
வேங்கைவயல்

வேங்கைவயல் கிராமத்தினர் மனதில் அழியா வடுவாகிப்போன இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய, வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டும், இதுவரை குற்றவாளிகள் யார் என்பதுகூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், குடிநீர்த் தேக்கத்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்திருக்கிறது.

முன்னதாக மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி சஞ்சய் கிஷண் தலைமையிலான நீதிமன்ற அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை முடிவில் நீதிபதிகள், ``குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் இருக்கிறது. எனவே, உயர் நீதிமன்றம் இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்... தேவைப்படும்பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் செல்லலாம்" என மனுதாரருக்கு அறிவுரை வழங்கி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.