Published:Updated:

``VRS-க்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பணி; இது எப்படி சரி?" - மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

அருண் கோயல் ( ட்விட்டர் )

``அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது ஏன்?" - உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கேள்வி.

``VRS-க்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பணி; இது எப்படி சரி?" - மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

``அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது ஏன்?" - உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கேள்வி.

Published:Updated:
அருண் கோயல் ( ட்விட்டர் )

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர் அருண் கோயல். கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசுப் பணியிலிருந்த இவர், கடந்த 18-ம் தேதி தன்னுடைய பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றார். அருண் கோயல் விருப்ப ஓய்வுபெற்ற மறுநாளே, நாட்டின் தேர்தல் ஆணையராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

அருண் கோயல்
அருண் கோயல்
ட்விட்டர்

இந்த நிலையில், நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக் கோரிய மனுக்களை விசாரித்துவருகிறது. இந்த விசாரணையின்போது அருண் கோயல் நியமன விவகாரமும் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு வழக்கறிஞர்களான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர், "அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை" என்றனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ட்விட்டர்

அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையில் சுதந்திரமான செயல்முறை தேவை. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், இத்தகைய நியமனங்கள் எப்படிச் சரியானவை... எனவே, தேர்தல் ஆணையராக அருண் கோயல் ஒரே நாளில் எப்படி நியமிக்கப்பட்டார் என்பது தொடர்பான நடைமுறைகள், ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்?'' எனக் கேள்வியெழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கேட்டனர்.

தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் நீதிமன்றம் மத்திய அரசின் மீது அதிருப்தியை வெளிபடுத்தியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.