Published:Updated:

பிரஷாந்த் பூஷண் வழக்கு: `அட்டர்னி ஜெனரல் கோரிக்கை!’ - தண்டனை முடிவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

பிரஷாந்த் பூஷண்

`நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணை தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மக்களின் நலனுக்காக அவர் ஏராளமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார். அவருடைய மக்கள்நலப் பணிகளை நீதிமன்றம் கணக்கில்கொள்ள வேண்டும்.’

பிரஷாந்த் பூஷண் வழக்கு: `அட்டர்னி ஜெனரல் கோரிக்கை!’ - தண்டனை முடிவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

`நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணை தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மக்களின் நலனுக்காக அவர் ஏராளமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார். அவருடைய மக்கள்நலப் பணிகளை நீதிமன்றம் கணக்கில்கொள்ள வேண்டும்.’

Published:Updated:
பிரஷாந்த் பூஷண்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹார்லி டேவிட்சன் பைக்மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்தும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய நான்கு தலைமை நீதிபதிகள் குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்விட்டரில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். `இந்த நிலையில் இது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்’ என உச்ச நீதிமன்றமே தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதி பாப்டே குறித்து வெளியிட்ட கருத்துக்கு பூஷண் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், `முன்னாள் நீதிபதிகள் குறித்த கருத்துக்கு, தான் வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை’ என்றார்.

 பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூஷணைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும், `தண்டனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்’ எனவும் தெரிவித்தது. தண்டனைக்காக கடந்த 20-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியபோது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ``இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை எதுவும் வழங்க வேண்டாம்'’ என்று கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், பிரஷாந்த் பூஷண் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யவும், மன்னிப்புக் கோரவும் மூன்று நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தது உச்ச நீதிமன்றம். இந்த அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனினும், தனது விமர்சனத்துக்கு தான் மன்னிப்பு கோரப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் பூஷண். நேற்றுடன் பிரஷாந்த் பூஷணுக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் இது தொடர்பான விசாரணை தொடங்கியது. இந்த நிலையில் பிரஷாந்த் பூஷணுக்கு மீண்டும் அரை மணி நேரம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இறுதிவரை மன்னிப்புக் கடிதம் வழங்கவில்லை.

 பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

இன்றைய வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ``நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணை தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மக்களின் நலனுக்காக அவர் ஏராளமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார். அவருடைய மக்கள்நலப் பணிகளை நீதிமன்றம் கணக்கில்கொள்ள வேண்டும். நீதித்துறையிலிருக்கும் ஊழல்கள் குறித்து முன்னாள் நீதிபதிகள் விமர்சனம் செய்த விவரங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நீதிமன்றம் தன்னை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அவர்கள், நீதித்துறையில் முன்னேற்றத்தைக் கேட்கின்றனர். இந்த வழக்கில் நீதிபதிகள் பிரசாந்த் பூஷணை மன்னிக்க வேண்டும் அல்லது இனிமேல் இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என எச்சரித்து அனுப்ப வேண்டும்’’ என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரஷாந்த் பூஷணின் வழக்கறிஞர் ராஜீவ் தவானும் இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு தண்டனை வழங்க வேண்டாம் எனவும், நீதிமன்றத்தின் செயல்பாடுக்கு விமர்சனமும் அவசியம்தான் என்ற வாதத்தை முன்வைத்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதி, ``உச்ச நீதிமன்றத்தை நாம் ஒருவொருக்கொருவர் அவமதிக்கத் தொடங்கினால், அதன்மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்?’’ எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விவரம் குறித்தோ அல்லது அது அறிவிக்கப்படும் தேதி உள்ளிட்ட எந்த விவரங்களையோ அறிவிக்காமல் உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism