Published:Updated:

`ஆணாதிக்க மனோபாவம்’ - பலாத்கார வழக்கில் இரு விரல் பரிசோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

Two finger test ( pixabay )

``இந்தச் சோதனையே தவறான ஓர் அனுமானம்தான். பாலியல் செயல்பாடுகள் அதிகமிருக்கும் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள் எனச் சொல்லும்போது, அதை நம்பாமல் இருப்பது ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது...”

`ஆணாதிக்க மனோபாவம்’ - பலாத்கார வழக்கில் இரு விரல் பரிசோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

``இந்தச் சோதனையே தவறான ஓர் அனுமானம்தான். பாலியல் செயல்பாடுகள் அதிகமிருக்கும் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள் எனச் சொல்லும்போது, அதை நம்பாமல் இருப்பது ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது...”

Published:Updated:
Two finger test ( pixabay )

`முள்ளு மேல சேலை பட்டாலும், சேலை மேல முள்ளு பட்டாலும், பாதிப்பு என்பது என்னவோ பெண்களுக்குத்தான்' எனப் பெண்களையே எப்போதும் அடக்கி வைக்கும் நிலையே இன்றுவரை தொடர்கிறது. அதே நிலைமைதான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கும்!

பாலியல் வன்கொடுமைக்குள்ளானதில் ஏற்கெனவே இடிந்து போயிருக்கும்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதுபோல, அவர்களுக்குச் சோதனை என்ற பெயரில் `இரு விரல் பரிசோதனை’ மேற்கொள்ளப்படுகிறது. இது இன்னும் அவர்களின் மனநிலையை மோசமாக பாதிக்கிறது. 

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

2013-ம் ஆண்டில், இந்தச் சோதனையைச் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அதோடு இந்தப் பரிசோதனையானது அறிவியல்பூர்வமற்றது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு இச்சோதனை மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்று கூறி, மருத்துவப்பாடப் புத்தகத்திலிருந்து இந்தச் செயல்முறையை நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமையன்று பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ``இன்றளவிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது.  இரு விரல் பரிசோதனை தடை செய்யப்படுகிறது, தடையை மீறி இந்தப் பரிசோதனையைச் செய்யும் நபர்கள், தவறான செயல்களில் ஈடுபட்டவர்களாகக் கருதப்படுவார்கள். 

இந்தச் சோதனையே தவறான ஓர் அனுமானம்தான். பாலியல் செயல்பாடுகள் அதிகமிருக்கும் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள் எனச் சொல்லும்போது, அதை நம்பாமல் இருப்பது ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது. 

Supreme Court Of India
Supreme Court Of India

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மற்றும் அதிலிருந்து மீண்டு வாழும் பெண்கள், இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதிசெய்ய வேண்டும்.

இச்சோதனை தடை செய்யப்பட்டது குறித்த குடும்ப நலத்துறை வகுத்துள்ள வழிகாட்டுதல்களை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளது.