Published:Updated:

`சிஏஏ போராட்டக்காரர்கள் மீதான மீட்பு நோட்டீஸ்..!’ - உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்

​​"குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உத்தரப்பிரதேச அரசே புகார்தாரர், நீதிபதி, வழக்கறிஞர்போல் செயல்படுகிறது" என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

`சிஏஏ போராட்டக்காரர்கள் மீதான மீட்பு நோட்டீஸ்..!’ - உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

​​"குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உத்தரப்பிரதேச அரசே புகார்தாரர், நீதிபதி, வழக்கறிஞர்போல் செயல்படுகிறது" என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

2019-ம் ஆண்டு, டிசம்பர் 11-ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில், பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சி மதத்தினர் இந்தியாவில் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்காகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் இந்தப் போராட்டங்களால் பொதுச் சொத்துகள் அதிக அளவில் சேதமடைந்தன.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்
Twitter

அந்த வகையில், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. சேதமடைந்த பொதுச் சொத்துகளின் தொகையை மீட்டெடுப்பதாக 236 போரட்டகாரர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு மாவட்ட நிர்வாகம் மீட்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச அரசின் மீட்பு நோட்டீஸை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கறிஞர் பர்வேஸ் ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், "மீட்பு நோட்டீஸை பிப்ரவரி 18-க்குள் உத்தரப்பிரதேச அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், "மீட்பு நோட்டீஸ் அனுப்பிய செயல்முறைகள் சட்டத்துக்கு முரணாக உள்ளன. மீட்பு நோட்டீஸைத் திரும்பப் பெற இதுதான் இறுதி வாய்ப்பு, இல்லையென்றால் உச்ச நீதிமன்றமே ரத்து செய்யும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, ​​"குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உத்தரப்பிரதேச அரசே புகார்தாரர், நீதிபதி, வழக்கறிஞர்போல் செயல்படுகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.