Published:Updated:

கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க கோரி மனு; விசாரிக்க தேதி குறித்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் ( ட்விட்டர் )

கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் 11-ம் தேதி விசாரிக்கவிருக்கிறது.

கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க கோரி மனு; விசாரிக்க தேதி குறித்த உச்ச நீதிமன்றம்

கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் 11-ம் தேதி விசாரிக்கவிருக்கிறது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம் ( ட்விட்டர் )

கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக இலக்குவைத்து வெறுக்கத்தக்க பேச்சுகள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது. பெங்களூர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் பீட்டர் மச்சாடோ, நேஷனல் சாலிடாரிட்டி ஃபோரம், இவாஞ்சலிக்கல் ஃபெல்லோஷிப் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், ``கடந்த மே மாதத்தில், வலதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்களால் இந்திய நாட்டின் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான வன்முறையின் மோசமான நிகழ்வுகள் மற்றும் இலக்குவைத்து வீசப்படும் வெறுப்புப் பேச்சுகள் என 57 வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருகின்றன. எதிர்வரும் காலங்களில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தீர்ப்பு
தீர்ப்பு

மேலும், கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராகப் பரவலான வன்முறை மற்றும் வெறுப்புப் பேச்சுகளை நிகழ்த்தும் குழுக்களையும், வழிபாட்டுத் தலங்கள், பிற கிறிஸ்தவ நிறுவனங்களின் மீதான தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகள் தவறிவிட்டன.

எனவே, இதைத் தடுக்க இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ``வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் சொல்வது சரியாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது. ஆனால் மனுவின் தகுதியைப் பற்றி எங்களால் மேலும் கூற முடியாது. ஜூலை 11 அன்று இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுகிறோம்" எனக் கூறினர்.