Published:Updated:

`மதம் இல்லை; மொழிதான் எல்லை!’ - சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம்

வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அங்கீகரிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Published:Updated:

`மதம் இல்லை; மொழிதான் எல்லை!’ - சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அங்கீகரிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்றம்

இந்தியாவில் சில மதங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து தேசிய அளவில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறில்லாமல் மாநில வாரியாக மக்கள் தொகை கணக்கின்படி சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண்டும் என பா.ஜ.க செய்திதொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்கள் வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ளார்கள். இதனால் இடஒதுக்கீடு போன்று அரசின் சலுகைகளைப் பெற முடியவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜோராஸ்ட்ரியர்கள் ஆகியோரை சிறுபான்மையினர் அன அங்கீகரித்து 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டிருந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

அஸ்வினி குமார் உபாத்யாய்
அஸ்வினி குமார் உபாத்யாய்

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அஸ்வினி குமாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ``மதம் என்பது அகில இந்திய அளவில்தான் பார்க்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருப்பதில் என்ன தவறு. மொழிதான் மாநில எல்லைகளுக்கு உட்பட்டது. மதம் மாநில எல்லைக்கு உட்பட்டது கிடையாது. மொழியை வைத்துதான் மாநிலத்தைப் பிரித்திருக்கிறார்கள். மதத்தை வைத்து அல்ல. எனவே, மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு மதத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க முடியாது" எனத் தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது.