Published:Updated:

`வாழ்நாள் முழுவதும் அவமதிக்க மாட்டேன்!' - மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்

`என் தாய், தந்தையைவிட தேசியக்கொடியை நேசிக்கிறேன். பள்ளி விழாக்களிலெல்லாம் தேசியக்கொடியின் பெருமைகளைப் பற்றிப் பேசுவதை வழக்கமாகவைத்திருக்கிறேன்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேசியக்கொடி அவமதிப்பு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகர். `தனக்கு ஆதரவாக பா.ஜ.க நிர்வாகிகள் குரல் கொடுக்காததில் வருத்தத்தில் இருக்கிறார் சேகர்' என்கின்றனர் அவரது தரப்பினர்.

சென்னை: `சர்ச்சை வீடியோ!’ - நடிகர் எஸ்.வி.சேகர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு

தந்தை பெரியார் சிலைமீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தயது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு போர்த்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எச்சரித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `தலைவர்களின் சிலைகளைக் களங்கம் செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' என்றார்.

முதல்வரின் கருத்துக்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், `காவியைக் களங்கம் எனக் குறிப்பிடுகிறார் முதல்வர். இந்தக் களங்கமான தேசியக்கொடியைத்தான் ஆகஸ்ட் 15-ம் தேதி ஏற்றப் போகிறாரா... தேசியக்கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை, பச்சை நிறம்கொண்ட கொடியை ஏற்கிறாரா?' எனக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களுக்கும் அவர் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரியார் சிலை
பெரியார் சிலை

இதைத் தொடர்ந்து, எஸ்.வி.சேகருக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் குரல் கொடுத்தனர். `வழக்கு என வந்தால் ஓடி ஒளிந்துகொள்வார் சேகர்' என முதல்வரும் விமர்சனம் செய்தார். இந்நிலையில், `எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி சென்னையைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

எஸ்.வி.சேகர் vs எடப்பாடி பழனிசாமி... முதல்வரின் பதில் பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது தேசியக்கொடியை அவமதித்த வகையில் வழக்கு பதிவு செய்தது சென்னை குற்றப்பிரிவு போலீஸ். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்துவிடுவார்கள் எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் எஸ்.வி.சேகர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் என்.நடராஜன், `வழக்கை ரத்து செய்ய முடியாது. அதேநேரம், `தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் இனி செயல்பட மாட்டேன்’ என நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து உத்தரவாதம் அளித்தால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம்' என்றார்.

எஸ்.வி.சேகர் - எடப்பாடி பழனிசாமி
எஸ்.வி.சேகர் - எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், இன்று நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் எஸ்.வி.சேகர். அந்த மனுவில், தான் செய்த சாதனைகளையெல்லாம் பட்டியலிட்டவர், `என் தாய், தந்தையைவிட தேசியக்கொடியை நேசிக்கிறேன். பள்ளி விழாக்களிலெல்லாம் தேசியக்கொடியின் பெருமைகளைப் பேசுவதை வழக்கமாகவைத்திருக்கிறேன். அதேநேரம், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்துப் பேசியதற்கும் வருத்தம் தெரிவிக்கிறேன். இனி வாழ்நாள் முழுவதும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

`மோடி பிரதமராக வர, நாங்கள் ஓட்டு கேட்டோம்; எஸ்.வி.சேகர்..?’ - முதல்வர் பழனிசாமி காட்டம்

இதைப் பதிவு செய்த நீதியரசர், `வரும் செப்டம்பர் 7-ம் தேதி வரை எஸ்.வி.சேகரைக் கைது செய்யக் கூடாது’ என உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் எஸ்.வி.சேகர் தரப்பினரோ, ``பெரியார் சிலை, எம்.ஜி.ஆர் சிலை விவகாரம் ஆகியவற்றில் தனக்கு ஆதரவாக எந்தவொரு பா.ஜ.க நிர்வாகியும் பேசாததில் அவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். இந்தக் கட்சிக்காக இவ்வளவு உழைத்தும் இவ்வளவுதான் மரியாதையா என்ற வேதனையிலும் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணையவும் வாய்ப்பிருக்கிறது" என்றனர்.

எஸ்.வி.சேகரை மன்னிப்புக் கேட்க வைத்த விஷயத்தில் உற்சாகத்தில் உள்ளனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு