Published:Updated:

மாணவி தற்கொலை விவகாரம்: `என்ஐஏ விசாரிக்க வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தில் மனு

உச்ச நீதிமன்றம் ( representational image )

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தையும் அமல்படுத்தக் கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. முதலில், மதம் மாறச் சொன்னதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக மாணவி வாக்குமூல வீடியவை பாஜக-வினர் சிலர் வெளியிட்டனர். இதையடுத்து வாக்குமூல வீடியோவில் தவறு நடந்துள்ளது என தமிழக புலனாய்வுத்துறை அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து, இதை விசாரிக்கத் தனிக்குழு ஒன்றை பாஜக அமைத்திருந்தது. தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் முன்பு, `மாணவி மரணத்துக்கு நீதி வேண்டும், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்’ என ABVP அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தற்போது வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, ``தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் இந்த மனுவில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism