Published:Updated:

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை! - இன்ஸ்பெக்டருக்கு ரூ.25,000 அபராதம்... நீதிபதி அதிரடி

அரியலூர்

பிரகாசத்தின் புகாரின் பேரில் முறையான நடவடிக்கை எடுக்காத செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஒரு மாதத்துக்குள் ரூ.25,000 இழப்பீட்டுத் தொகையாக, பிரகாசத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை! - இன்ஸ்பெக்டருக்கு ரூ.25,000 அபராதம்... நீதிபதி அதிரடி

பிரகாசத்தின் புகாரின் பேரில் முறையான நடவடிக்கை எடுக்காத செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஒரு மாதத்துக்குள் ரூ.25,000 இழப்பீட்டுத் தொகையாக, பிரகாசத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published:Updated:
அரியலூர்

தன்னைத் தாக்கிவிட்டதாகப் புகார் அளித்தவரின் மனுவை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் ரூ.25,000 இழப்பீடு செலுத்த வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்
அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம். இவர் செந்துறை தி.மு.க ஒன்றியப் பிரதிநிதி. இவருக்கு இடப் பிரச்னை சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. செல்வராஜ் என்பவரும், மேலும் ஐந்து பேரும் பிரகாசத்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, எலும்புமுறிவு ஏற்பட்டு அரியலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செந்துறை காவல் நிலையம் தொடங்கி ஆட்சியர், எஸ்.பி வரையிலும் புகார் கொடுத்திருக்கிறார். கடைசிவரையிலும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

போலீஸார்
போலீஸார்

இந்நிலையில், பிரகாசம் தொடுத்த வழக்கின் பேரில், `இவ்வளவு காயத்துடன் ஒரு மனிதர் புகார் கொடுத்திருக்கிறார். ஏன் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவில்லை?’ என அரியலூர் நீதிமன்ற நீதிபதி, வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இது தொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன்,

அரியலூர்
அரியலூர்

``பிரகாசத்தின் புகாரின் பேரில் முறையான நடவடிக்கை எடுக்காத செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஒரு மாதத்துக்குள் ரூ.25,000 இழப்பீட்டுத் தொகையாக, பிரகாசத்துக்கு வழங்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது ராஜ்குமார் கரூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism