Published:Updated:

கொடநாடு: எஃப்.ஐ.ஆர்-ல் வெட்டுக்காயம்; உடற்கூறாய்வில் மூச்சுத்திணறல்! - காவலாளி கொலையில் சர்ச்சை?

கொடநாடு எஸ்டேட்டில் நோட்டீஸ்
கொடநாடு எஸ்டேட்டில் நோட்டீஸ் ( கே.அருண் )

கொடநாடு பங்களா காவலாளி ஓம்பகதூர் உடலில் 7 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையிலும், மூச்சுத்திணறியே உயிரிழந்திருக்கிறார் என உடற்கூறாய்வு முடிவிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விலகாத மர்மங்களோடு அடுத்தடுத்த தொடர் பரபரப்பு திருப்பங்களைக் கண்டுவரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தற்போது கூடுதல் புலன்விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் அடிப்படையிலேயே கடந்த 17-ம் தேதி காவல்துறை தரப்பில் முதன்மைக் குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலாதாவின் கார் ஓட்டுநரும், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக காவல்துறையால் கருதப்பட்டு, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவத்தன்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் பல மர்மங்களுக்குக்குக் காவல்துறையினர் விடைதேடிவருகின்றனர்.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

கொடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் கொலை தொடர்பாக காவல்துறையினர் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கைக்கும், மருத்துவர்கள் அளித்துள்ள கூறாய்வு முடிவுகளுக்கும் பெரிய முரண் இருப்பதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுவருகின்றனர்.

மீட்டிங்; ரகசிய பேரம்; எடப்பாடி பழனிசாமிக்கு திகில் கிளப்பும் கொடநாடு!| Elangovan Explains

இந்தச் சர்ச்சை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ஒருவர், ``2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர்கொண்ட கும்பல் எஸ்டேட்டுக்குள் நுழைந்தது. அங்கு பணியிலிருந்த காவலாளி ஓம் பகதூர், அவர்களைத் தடுத்திருக்கிறார். அந்தக் கும்பல் ஓம்பகதூரைக் கொலை செய்தது. ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டவிதம் குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ஓம்பகதூர் உடலில் ஏழு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

ஆனால், மருத்துவக்குழுவினர் அளித்த பிரேத பரிசோதனை முடிவில் ஓம்பகதூர் உடலில் ரத்தக் காயங்கள் ஏதும் இல்லை. மூச்சுத்திணறியே உயிரிழந்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரண்பட்ட தகவல்கள் பல சந்தேகங்களை எழுப்பிகின்றன. இது குறித்த வாதத்தின்போது நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பிடம் கேள்வியெழுப்புவோம்" என்றார்.

கொடநாடு வழக்கு: கொள்ளையர்களிடம் வாகன சோதனை; நைட் டூட்டி பார்த்த போலீஸாரிடம் ரகசிய விசாரணை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு