Published:Updated:

``சாமானியனால் எப்படி கட்ட முடியும்?” - வழக்கறிஞர்களின் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர்

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

``எந்தவொரு நீதிமன்றமும் சலுகை பெற்றவர்களுக்காக மட்டும் இருக்கக்கூடாது, நீதியின் கதவுகள் அனைவருக்கும் சமமாகத் திறந்திருக்க வேண்டும்" - மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

``சாமானியனால் எப்படி கட்ட முடியும்?” - வழக்கறிஞர்களின் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர்

``எந்தவொரு நீதிமன்றமும் சலுகை பெற்றவர்களுக்காக மட்டும் இருக்கக்கூடாது, நீதியின் கதவுகள் அனைவருக்கும் சமமாகத் திறந்திருக்க வேண்டும்" - மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

Published:Updated:
மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, மிகப்பெரிய வழக்கறிஞர்களால் வாங்கப்படும் அதிக கட்டணம் குறித்தும், அதனால் சாமானியன் எதிர்கொள்ளும் நிலைகுறித்தும் வருத்தம் தெரிவித்து கேள்வியெழுப்பியுள்ளார். ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கிரண் ரிஜிஜு, ``வளமான மக்களெல்லாம் மிகப்பெரிய பெரிய வழக்கறிஞர்களை நாட முடியும். அத்தகைய வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளனர்.

நீதி
நீதி

ஆனால், அவர்களின் கட்டணத்தைச் சாமானியரால் செலுத்த முடியாது. ஒரு விசாரணைக்கு 10-லிருந்து 15 லட்சம் ரூபாய் வசூலித்தால், ஒரு சாமானியனால் எப்படி இவ்வளவு தொகையைச் செலுத்த முடியும்? எந்தவொரு நீதிமன்றமும் சலுகை பெற்றவர்களுக்காக மட்டும் இருக்கக்கூடாது, நீதியின் கதவுகள் அனைவருக்கும் சமமாகத் திறந்திருக்க வேண்டும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும் தொடர்ந்து பேசிய கிரண் ரிஜிஜு, ``உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் மற்றும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் நடக்கும். ஆனால், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில், பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் பார்வை. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வழக்கற்றுப் போன 71 சட்டங்கள் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தார்.